வீடு / சமையல் குறிப்பு / சன்னா க்ரீன் புலாவ்

Photo of Channa Green Pulao by Sowmya Sundar at BetterButter
319
0
0.0(0)
0

சன்னா க்ரீன் புலாவ்

Jul-18-2018
Sowmya Sundar
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சன்னா க்ரீன் புலாவ் செய்முறை பற்றி

புதினா கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்து கருப்பு கொண்டைகடலை சேர்த்து செய்த ஆரோக்கியமான புலாவ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி-1 1/2 கப்
  2. தண்ணீர்- 3 கப்
  3. கருப்பு கொண்டைகடலை -1/4 கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. சீரகம்-1 டீஸ்பூன்
  6. பட்டை -1 துண்டு
  7. கிராம்பு-3
  8. சர்க்கரை-1/8 டீஸ்பூன்
  9. பெரிய வெங்காயம்-1 நறுக்கியது
  10. எண்ணெய்/நெய்-2 டேபிள் ஸ்பூன்
  11. எலுமிச்சை சாறு-1 டீஸ்பூன்
  12. அரைக்க:
  13. புதினா இலை-1/4 கப்
  14. கொத்தமல்லி இலை-1/4 கப்
  15. இஞ்சி-1 துண்டு
  16. பூண்டு- 2 பல்
  17. பச்சை மிளகாய்-3
  18. தேங்காய் துருவல்-2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்து கொள்ளவும். பாஸ்மதி அரிசியை களைந்து விட்டு பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
  2. சன்னாவை தண்ணீர் ஊற்றி இரவே ஊற வைக்கவும். பிறகு குக்கரில் சன்னாவை தண்ணீருடன் இரண்டு விசில் வரை மட்டும் வேக வைத்து வடிகட்டி கொள்ளவும். ஏனெனில் மறுபடியும் பிரியாணியுடன் வேக வைக்க போகிறோம்.
  3. குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம், பட்டை,கிராம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. பின் அதனுடன் உப்பு, சர்க்கரை, அரைத்த விழுதை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை வதக்கவும்.
  5. பின் பிரியாணி அரிசி மற்றும் சன்னாவை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி தண்ணீர் விட்டு குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் சிம்மில் ஐந்து நிமிடம் வைத்து அணைக்கவும்
  6. திறந்து எலுமிச்சை சாற்றை கலந்து பரிமாறவும் .சுவையான பிரியாணி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்