வீடு / சமையல் குறிப்பு / பருப்பு பாயசம்

Photo of Paruppu payasam by Margaret Charles at BetterButter
379
1
0.0(0)
0

பருப்பு பாயசம்

Jul-18-2018
Margaret Charles
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பருப்பு பாயசம் செய்முறை பற்றி

இனிப்புகள் இல்லாத விழாக்கள் ஏது? பாயசம் இல்லாமல் விசேஷம் ஏது? இது போன்ற எளிதாக செய்ய கூடிய இனிப்புகள் இருந்தால் எந்நாளும் கொண்டாட்டம் தான்!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • சிம்மெரிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. நன்கு வறுத்த பாசி பருப்பு 1 கப்
  2. கடலை பருப்பு 1 தே க
  3. ஜவ்வரிசி 2 மே க
  4. வெல்லம் துருவியது 1/2 கப்
  5. முதல் தேங்காய் பால் 1/2 கப்
  6. இரண்டாம் தேங்காய் பால் 1 கப்
  7. நறுக்கிய கொப்பரை சில் - சிறிதளவு
  8. முந்திரி பருப்பு 1 மே க
  9. முந்திரி பழம் 1/2 தே க
  10. ஏலக்காய் 3
  11. நெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடலை பருப்பை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊர் வைக்கவும்.
  2. ஒரு குக்கரில் ஜவ்வரிசி, கடலை பருப்பை வேக வைத்து வைக்கவும்.
  3. ஒரு சாதம் வைக்கும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, பாசிப்பருப்பை சேர்த்து வேக வைக்கவும்.
  4. அரை பாகம் வெந்தவுடன், வேக வைத்த கடலை பருப்பு மற்றும் ஜவ்வரிசியை சேர்க்கவும்
  5. முக்கால் வேக்காடு வெந்த பின் ஏலக்காய் தட்டி போட்டு, இரண்டாம் தேங்காய் பாலை சேர்க்கவும்.
  6. துருவிய வெல்லத்தை சேர்த்து கலக்கவும். வெல்லத்தில் அழுக்கு இருக்கும் என்று எண்ணினால் பாகு காய்த்து ஊற்றவு
  7. நன்கு வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு, முதல் தேங்காய் பாலை ஊற்றவும்.
  8. பின்னர் ஒரு கடாயில் நெய் ஊற்றி, கொப்பரை சில் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து தனி வைக்கவும்.
  9. அதே நெய்யில் முந்திரி பழமும் பருப்பும் சேர்த்து வதக்கவும்.
  10. எல்லாவற்றையும் பாயாசத்துடன் கலந்தால் சுவையான பாயசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்