வீடு / சமையல் குறிப்பு / ரோஸ் மில்க் வித் ஜெல்லி

Photo of Rose Milk with jelly by Zainab Fazeela at BetterButter
529
4
0.0(0)
0

ரோஸ் மில்க் வித் ஜெல்லி

Jul-21-2018
Zainab Fazeela
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரோஸ் மில்க் வித் ஜெல்லி செய்முறை பற்றி

பால், ரோஸ் எஸ்ஷென்ஸ் மற்றும் ஜெல்லி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் ½ லிட்டர்
  2. சீனி தேவையான அளவு
  3. ரோஸ் எஸ்ஷென்ஸ் 3 அல்லது 4 சொட்டு (தேவைக்கு ஏற்ப)
  4. ஜெல்லி பாக்கெட் (strawberry flavour)
  5. சப்ஜா விதை 1 தே.க

வழிமுறைகள்

  1. பாலை தேவையான அளவு சீனி சேர்த்து காய்ச்சி ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  2. சப்ஜா விதையை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்
  3. ஜெல்லி செய்வதற்கு : வாணலியில் 1 l½ டம்ளர் (மீடியம் அளவு) தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  4. தண்ணீர் கொதித்ததும் ஜெல்லி பவுடர் சேர்த்து நன்கு கரைக்கவும்.
  5. கரைந்த பிறகு அடுப்பை அணைத்து ஒரு பவுலில் ஊற்றி ஆற வைத்து 2 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவேண்டும்.
  6. ஜெல்லி நன்கு உறைந்ததும் அதை சிறுசிறு துண்டுகளாக கட் செய்து கொள்ள வேண்டும்.
  7. ப்ரிட்ஜில் இருந்து பாலை எடுத்து அதில் ரோஸ் எஸ்ஷென்ஸ் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்
  8. அதில் கட் செய்து வைத்துள்ள ஜெல்லி துண்டுகளை போட்டு அதோடு ஊறிய சப்ஜா விதையையும் பாலில் கலந்து கூலாக குடித்து மகிழுங்கள்
  9. சுவையான ரோஸ் மில்க் வித் ஜெல்லி தயார்.
  10. குறிப்பு : காய்ச்சிய பால் ஜெல்லி மற்றும் ஊறவைத்த சப்ஜா இவைகளை ரெடியாக வைத்திருந்தால் தேவைபடும் போது மிக்ஸ் செய்து அருந்தலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்