வீடு / சமையல் குறிப்பு / சென்னா கேப்ஸிகம் பட்டர் கிரேவி

Photo of Channa capsicum butter gravy by Yasmin Shabira at BetterButter
409
3
0.0(0)
0

சென்னா கேப்ஸிகம் பட்டர் கிரேவி

Jul-24-2018
Yasmin Shabira
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சென்னா கேப்ஸிகம் பட்டர் கிரேவி செய்முறை பற்றி

அனைவரும் விரும்பும் சுவையான பட்டர் கிரேவி பெட்டர் பட்டருக்காக:kissing_closed_eyes::kissing_closed_eyes::kissing_closed_eyes:

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளி : 3 பெரியது
  2. கொண்டைக்கடலை : 1 கப்
  3. குடை மிளகாய் : 2
  4. இஞ்சி பூண்டு விழுது : 1 மேசைக்கரண்டி
  5. மிளகாய் தூள் : 2 தேக்கரண்டி
  6. ஜீரகதூள் : 1/2 தேக்கரண்டி
  7. கரம் மசாலா : 1 தேக்கரண்டி
  8. பட்டர் : 100 கிராம்
  9. மல்லி தழை : ஒரு கையளவு
  10. உப்பு : தேவையான அளவு
  11. எண்ணெய் : 2 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. குக்கரில் போதுமான அளவு தண்ணீர் விட்டு கொண்டைக்கடலையை 4 விசில்களுக்கு வேக வைத்துக் கொள்ளவும்
  2. தக்காளியை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு தோல் நீங்கும் வரை வேக வைத்துக் கொள்ளவும்
  3. வேகவைத்த தக்காளியை தோலை நீக்கி விட்டு மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ள வேண்டும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  5. வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்
  6. நன்றாக வதங்கிய பின்னர் கொடுக்கப்பட்ட அளவு சீரகத் தூள் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்
  7. நறுக்கிய குடை மிளகாய் சேர்க்கவும்
  8. வேக வைத்த கொண்டைக்கடலை மற்றும் அரைத்த தக்காளி ப்யூரியை சேர்த்து நன்றாக கிளறி விடவும்
  9. தேவையான அளவு உப்பு சேர்த்து கொடுக்கப்பட்டுள்ள அளவில் பாதியளவு பட்டர் சேர்த்து 10 நிமிடம் சிம்மில் கொதிக்க விடவும்
  10. நன்றாக கொதித்த பிறகு மீதி பட்டர் சேர்த்து கிளறி விடவும்
  11. நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்
  12. அவ்வளவுதான் மிகவும் சுவையான சென்னை கேப்ஸிகம் பட்டர் கிரேவி தயார்
  13. நான், சப்பாத்தி, கீ ரைஸ், பரோட்டா உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்