வீடு / சமையல் குறிப்பு / அரிசி வெல்ல புட்டு

Photo of Rice jaggery puttu by Meenakshi Ramesh at BetterButter
579
1
0.0(0)
0

அரிசி வெல்ல புட்டு

Jul-29-2018
Meenakshi Ramesh
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
75 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அரிசி வெல்ல புட்டு செய்முறை பற்றி

2 டம்ளா் அரிசியை அரை மணி நிமிடம் உுறவைத்து வடித்து பிறகு சிவக்க வறுத்து பொடித்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணிிர் கொதிக்க வைத்து அதில் சிறிதளவு மஞ்சள் துள் சோ்த்து அதை அரிசி மாவில் தெளித்து பிசரி பத்து நிமிடம் உுறவைக்கவும். பிறகு ஒரு இட்லிபானையில் அகண்ட பாத்திரத்தில் கலந்த அரிசி மாவை பதினைந்து நிமிடம் ஆவியில் வேகவைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் வெல்லம் கரைத்து வடிகட்டி கெட்டி பாகு வைத்து வெந்த அரிசி மாவுடன் நன்றாக கையால் கலக்கவும். ஒரு வாணலியில் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு அதில் சிறிது முந்திரி,அரை கப் தேங்காய் சேர்த்து வறுத்து புட்டு மாவில் சோ்க்கவும்.ஏலக்காய் சேர்த்து பரிமாறவும். சுவையான புட்டு தயார்.

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி 2 கப்
  2. தண்ணீர் 1 டம்ளர்
  3. வெல்லம்1 1/2 டம்ளர்
  4. ஏலக்காய் சிறிதளவு
  5. தேங்காய் அரை கப்
  6. முந்திரி சிறிதளவு
  7. ஒரு சிட்டிகை உப்பு.
  8. நெய் இரண்டு தேக்கரண்டி.

வழிமுறைகள்

  1. அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் உுறவைத்துபிறகு வடித்து ஒரு துணியில் பரத்தி வைக்கவும்.
  2. ஒரு வாணலியில் காய வைத்த அரிசியை நன்றாக பொன்னிறமாக வறுக்கவும்.
  3. அதை நன்கு பொடித்து கொள்ளவும்.
  4. இன்னொரு வாணலியில் தண்ணீர் + சிறிது மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க வைத்து அரிசி மாவில் சிறிது சிறிதாக தெளித்து பிசையவும்.
  5. இட்லி பானையை சுட வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை கொட்டி ஆவியில் பதினைந்து நிமிடம் வேகவைக்கவும்.
  6. ஒரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரி,தேங்காய் வறுத்து வெந்த மாவில் கொட்டி கிளறவும்.
  7. சுவையான புட்டு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்