முட்டை ஃப்ரைட் ரைஸ் செய்வதற்கு பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஊறவைத்து உப்பு தண்ணீர் எண்ணெய் சேர்த்து வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி ஆற வைத்துக் கொள்ளவும்
காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது உப்பு காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
காய்கறிகள் வெந்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்
முட்டை காய்கறிகள் வெந்தவுடன் அதில் வேக வைத்த பாசுமதி அரிசியை சேர்க்கவும்
காய்கறி கலவையில் சோயா சாஸ் பெப்பர் தூள் சேர்த்து மீண்டும் கிளறி பரிமாறலாம்
சுவையான முட்டை ஃப்ரைட் ரைஸ் தயார்
சிக்கன் ஹக்கா நூடுல்ஸ் செய்வதற்கு நூடுல்ஸை வேகவைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி ஆற வைத்துக் கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சிக்கன் துண்டுகள் உப்பு சேர்த்து வதக்கவும்
காய்கறிகள் பொடியாக நறுக்கி கொள்ளவும்
சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
காய்கறிகள் நன்கு வதங்கியவுடன் அதில் சோயா சாஸ் சில்லி சாஸ் ஆற வைத்த நூடுல்ஸ் கலந்து பெப்பர் தூள் சேர்த்து கிளறி பரிமாறலாம்
சுவையான சிக்கன் ஹக்கா நூடுல்ஸ் தயார்
செஸ்வான் சிக்கன் டிரம்ஸ்டிக் செய்வதற்கு இரண்டு சிக்கன் லெக்பீஸ் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும் அதில் இஞ்சி பூண்டு விழுது சிக்கன் பவுடர் உப்பு கேசரி பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும் கலந்த சிக்கன் துண்டுகளை கழுவி 20 நிமிடம் மசாலா சாரும் வரை ஊற வைக்கவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை பொரித்து கொள்ளவும்
செஷ்வான் சாஸ் செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு உப்பு சேர்த்து பொரியவிடவும் காய்ந்த மிளகாயை தண்ணீரில் ஊறவைத்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும் அந்த பேஸ்ட்டை சேர்த்து கொதிக்க விடவும் வினிகர் ஊற்றி எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்
சுவையான செஸ்வான் சாஸ் தயார்
schezwan drumstick செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொரிய விட்டு அதில் டொமேட்டோ சாஸ் செஷ்வான் சாஸ் உப்பு சேர்க்கவும்
சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
நன்கு கொதித்ததும் அதில் ஒரு ஸ்பூன் சோயா சாஸ் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து வெங்காயத்தாள் தூவி பரிமாறலாம் சுவையான செஸ்வான் சிக்கன் டிரம்ஸ்டிக் தயார்
உருளைக்கிழங்கு french fries செய்வதற்கு உருளைக்கிழங்கை தோல் சீவி நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும் வெட்டிய உருளைக்கிழங்கில் கான்பிளவர் மாவு உப்பு சேர்த்து பிசைந்து ஃப்ரீசரில் ஐந்து நிமிடம் வைத்துக் கொள்ளவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ப்ரெட் ப்ரைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் சுவையான ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் தயார்
சிக்கன் சான்விச் செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சிக்கன் துண்டுகள் இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் குடை மிளகாய் உப்பு சேர்த்து வதக்கவும்
சிக்கன் வெந்தவுடன் அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து மெள்ளக் கிளறவும்
சுவையான சிக்கன் ஸ்டாப்பிங் தயார் சாண்ட்விச் செய்வதற்கு பிரெட் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்
பிரெட்டின் மேல் செய்து வைத்துள்ள சிக்கன் ஸ்டாப்பிங்கை சேர்க்கவும்
சான்விச் டோஸ்டரில் பிரட்டை வைத்து அதன் மேல் மற்றொரு பிரட்டை வைத்து மூடி ரோஸ்ட் செய்யவும்
சுவையான ஈஸியான சிக்கன் ப்ரெட் சாண்ட்விச் தயார்
சிக்கன் பிரியாணி செய்வதற்கு முதலில் பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை ஏலக்காய் பிரிஞ்சி இலை போட்டு பொரியவிடவும் பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் தக்காளி புதினா மல்லி இலை இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து வதக்கவும்
தக்காளி வதங்கியதும் அதில் சிக்கன் துண்டுகள் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தயிர் சேர்த்து வேகவிடவும்
சிக்கன் துண்டுகள் முக்கால் பாகம் வெந்தவுடன் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை சேர்த்து வேக வைக்கவும்
முக்கால் பாகம் வெந்தவுடன் நெய் சேர்த்து தம்மில் ஸ்லோவா 20நிமிடம் வைக்கவும் சுவையான சிக்கன் பிரியாணி தயார்
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க