வீடு / சமையல் குறிப்பு / பனீர் பிரியாணி சேமியா

Photo of Paneer Biryani semiya by Surya Rajan at BetterButter
219
2
0.0(0)
0

பனீர் பிரியாணி சேமியா

Aug-01-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பனீர் பிரியாணி சேமியா செய்முறை பற்றி

பனீர் ல் புரதச் சத்து அதிகமாக உள்ளது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனை சேமியாவில் சேர்த்துக்கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சேமியா ஒரு கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. வெங்காயம் 1
  4. கேரட் துருவியது 1
  5. பனீர் தேவையான அளவு
  6. பிரியாணி மசாலா ஒரு ஸ்பூன்
  7. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  8. மிளகாய் ஒன்று
  9. லெமன் ஜூஸ் ஒரு ஸ்பூன்
  10. கருவேப்பிலை சிறிதளவு
  11. கொத்தமல்லி தழை சிறிதளவு
  12. எண்ணெய் 2 ஸ்பூன்
  13. கடுகு அரை ஸ்பூன்
  14. சீரகம் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சேமியாவை வெறும் வாணலியில் 3 நிமிடம் மிதமான சூட்டில் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் தேவையான காய்கறிகள் துருவிய கேரட் உப்பு சேர்த்து வதக்கவும்
  4. பின்னர் பனீர் துண்டுகளை சேர்க்கவும்
  5. காய்கறிகள் வதங்கியவுடன் தர்மசாலா பிரியாணி மசாலா சேர்த்து வதக்கவும்
  6. 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
  7. தண்ணீர் கொதித்தவுடன் வறுத்த சேமியா சேர்த்து கிளறி மூடி போட்டு மிதமான சூட்டில் 3 நிமிடம் வேக வைக்கவும்
  8. சேமியா வேகவில்லை எனில் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து கிளறி கொண்டே இருக்கவும்
  9. சேமியா வெந்ததும் அடுப்பை ஆப் செய்யவும்
  10. இறுதியாக கொத்தமல்லி தழை லெமன் ஜூஸ் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்