வீடு / சமையல் குறிப்பு / கடலைப்பருப்பு சௌசௌ கூட்டு

Photo of Kadalai parupu caucau kootu by Maala Rajamanickam at BetterButter
603
1
0.0(0)
0

கடலைப்பருப்பு சௌசௌ கூட்டு

Aug-01-2018
Maala Rajamanickam
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கடலைப்பருப்பு சௌசௌ கூட்டு செய்முறை பற்றி

Kadalai parupu caucau kootu

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலைப்பருப்பு - 1 டம்ளர்
  2. சௌசௌ - 1
  3. தக்காளி - 1
  4. சின்ன வெங்காயம் - 6
  5. தேங்காய் - அரை மூடி
  6. பச்சை மிளகாய்
  7. கருவேப்பிலை
  8. உப்பு
  9. மஞ்சள் தூள்
  10. மிளகாய் தூள்

வழிமுறைகள்

  1. 1. 1 டம்ளர் கடலைப்பருப்பு, சௌசௌ 1, மஞ்சள் தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்க.
  2. 2. அரைக்க தேவையானவை அரை மூடி தேங்காய் துருவல் பச்சை மிளகாய் - 3 சோம்பு - 1 டீ ஸபூன் கருவேப்பிலை இவற்றை நன்கு நைஸாக மிக்ஸியில் அரைத்து கொள்க.
  3. 3. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து சின்ன வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து 1 தக்காளியை அறுத்துப் போட்டு நன்றாக வணக்க வேண்டும்.
  4. 4. தக்காளி நன்கு வதங்கியதும் மிக்ஸியில் அரைத்த விழுதை அதில் போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க விடவும்.
  5. 5. அவை நன்றாக கொதிக்கும் போது அதில் குக்கரில் வேக வைத்த கடலைப்பருப்பு, சௌசௌ இவற்றை அதில் கொட்ட வேண்டும். இப்பொழுது தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.
  6. 6. இப்பொழுது சுவையான சுலபமான புரதச்சத்து நிறைந்த கடலைப்பருப்பு சௌசௌ கூட்டு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்