வீடு / சமையல் குறிப்பு / புரோட்டீன் புலாவ்

Photo of Protein pulav by Krishnasamy Vidya Valli at BetterButter
353
0
0.0(0)
0

புரோட்டீன் புலாவ்

Aug-02-2018
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

புரோட்டீன் புலாவ் செய்முறை பற்றி

எப்போதும் செய்யும் புலாவிலிருந்து ஒரு மாற்று. குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற ரெசிபி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கடலைப்பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து -1/4 கப்
  2. பாஸ்மதி அரிசி -1/4 கப்
  3. பச்ச பட்டாணி -1/8 கப்
  4. பச்ச மிளகாய் 1
  5. மிளகாய் வத்தல் -1
  6. பெருஞ்சீரகம் -1/2 தேக்கரண்டி
  7. தேங்காய் துருவல் 2 தேக்கரண்டி
  8. உப்பு -1/2 தேக்கரண்டி
  9. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
  10. தாளிக்க
  11. நெய் 1 தேக்கரண்டி
  12. சீரகம் 1/2 தேக்கரண்டி
  13. இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/2 தேக்கரண்டி
  14. பட்டை -1 சிறிய துண்டு
  15. ஏலக்காய் கிராம்பு -தலா 2
  16. வெங்காயம் பொடியாக நறுக்கியது 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரிசி பருப்புகளை தனித்தனியாக ஊறவைக்கவும்
  2. பருப்புகளை தண்ணீர் வடித்து விட்டு பச்ச மிளகாய், மிளகாய் வத்தல் தேங்காய் பெருஞ்சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பச்ச பட்டாணி சேர்த்து வதக்கவும்
  5. அரைத்த விழுதை சேர்த்து கிளறவும்
  6. ஊறவைத்த அரிசி சேர்த்து கிளறி உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து ரைஸ் குக்கரில் வேகவிடவும். அல்லது பிரஷர் குக்கரில் ஒரு விசில் விட்டும் எடுக்கலாம். நேரடியாகவும் கடாயில் தண்ணீர் சேர்த்து வேகவிடலாம்.
  7. கீப் வாம் மோட்/நன்றாக வெந்ததும் - வந்தவுடன் கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும். தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. தயிர் சாலட் உடன் சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்