வீடு / சமையல் குறிப்பு / பச்சைபயறு உருண்டை மோர்க்குழம்பு

Photo of Greengram Urundai Morkuzhambu by Sowmya Sundar at BetterButter
259
0
0.0(0)
0

பச்சைபயறு உருண்டை மோர்க்குழம்பு

Aug-03-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சைபயறு உருண்டை மோர்க்குழம்பு செய்முறை பற்றி

முளைகட்டிய பச்சை பயறில் உருண்டை செய்து அதை ஆவியில் வேகவைத்து செய்யும் அரைத்து விட்ட மோர்க்குழம்பு .பச்சை பயறு முளைகட்டிய நேரம் சேர்க்கபடவில்லை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருண்டை செய்ய :
  2. முளைகட்டிய பச்சை பயறு - 1/2 கப்
  3. பச்சை மிளகாய்-1
  4. மிளகாய் வற்றல்-1
  5. சீரகம்- 1 டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. கடலை மாவு-2 டேபிள் ஸ்பூன்
  8. குழம்பு செய்ய :
  9. கடைந்த கெட்டிமோர் -2 கப்
  10. உப்பு தேவையான அளவு
  11. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  12. பெருங்காயதூள்-1/4 டீஸ்பூன்
  13. எண்ணெய் -2 டீஸ்பூன்
  14. கடுகு-1 டீஸ்பூன்
  15. கறிவேப்பிலை-சிறிது
  16. கொத்தமல்லி தழை சிறிது
  17. வறுத்து அரைக்க :
  18. தேங்காய் துருவல்-1/2 கப்
  19. எண்ணெய்-1 டீஸ்பூன்
  20. கடலை பருப்பு-1 டேபிள் ஸ்பூன்
  21. துவரம் பருப்பு-1 டேபிள் ஸ்பூன்
  22. மிளகாய் வற்றல்- 3
  23. வெந்தயம்-1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் முளைகட்டிய பச்சை பயறு, பச்சை மிளகாய் ,மிளகாய் வற்றல் ,சீரகம் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.
  2. அதனுடன் கடலை மாவு மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து உருட்டி கொள்ளவும்
  3. அதை ஆவியில் பத்து நிமிடம் வேக வைத்து கொள்ளவும்
  4. குழம்புக்கு வறுத்து அரைக்க ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, துவரம் பருப்பு வெந்தயம் மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து கொண்டு தேங்காய் துருவல் சேர்த்து மோர் விட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  5. கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு ,கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுது, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயதூள் சேர்த்து வதக்கவும்
  6. அதனுடன் வேக வைத்த உருண்டைகள்,மோர் மற்றும் உப்பு சேர்த்து பொங்கி வந்ததும் இறக்கவும்
  7. கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்