வீடு / சமையல் குறிப்பு / டபுள் பீன்ஸ் குருமா

Photo of Double beans kurma by Sharmiley Ravi at BetterButter
393
0
0.0(0)
0

டபுள் பீன்ஸ் குருமா

Aug-06-2018
Sharmiley Ravi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டபுள் பீன்ஸ் குருமா செய்முறை பற்றி

Double beans is rich in protein. Kids will love this recipe

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. டபுள் பீன்ஸ் 200 கிராம்
  2. கசகசா அரை ஸ்பூன்
  3. சோம்பு அரை ஸ்பூன்
  4. முந்திரிப்பருப்பு 3
  5. துருவிய தேங்காய் 3 ஸ்பூன்
  6. பட்டை சிறு துண்டு
  7. கிராம்பு-2
  8. ஏலக்காய்-2
  9. வெங்காயம் 2
  10. தக்காளி-3
  11. பச்சை மிளகாய் 2
  12. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  13. உப்பு தேவைக்கேற்ப
  14. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  15. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  16. எண்ணெய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. டபுள் பீன்ஸை 8 மணி நேரம் நன்றாக தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஊற வைத்த பின்பு குக்கரில் போட்டு 3 விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் மற்றும் சிறிதளவு சோம்பு சேர்த்து தாளிக்கவும்
  4. வெட்டி வைத்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை கடாயில் சேர்த்து வெங்காயம் நன்றாக பிரவுன் கலர் வரும் வரை வதக்கவும்
  5. வெங்காயம் வதங்கிய பின் அதன்மேல் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. மிக்ஸியில் வதக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்க்கவும்
  7. அதனுடன் சிறிது துருவிய தேங்காய் கசகசா மற்றும் முந்திரி பருப்பை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  8. அரைத்து வைத்த விழுதை கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்
  9. தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
  10. வேக வைத்துள்ள டபுள் பீன்ஸ் இந்த கொதித்துக்கொண்டிருக்கும் குருமாவில் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைக்கவும்
  11. கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்
  12. சிறிது சீரகத்தை நன்றாக வருத்து கொண்டு பொடி செய்து இதன் மேல் தூவி பரிமாறவும்
  13. சுவையான அதிக புரதம் நிறைந்த ருசியான டபுள் பீன்ஸ் குருமா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்