வீடு / சமையல் குறிப்பு / சத்துமாவு கூழ்

Photo of protein rich porridge by Hasina Hussain at BetterButter
308
1
0.0(0)
0

சத்துமாவு கூழ்

Aug-08-2018
Hasina Hussain
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சத்துமாவு கூழ் செய்முறை பற்றி

புரதச்சத்து உட்பட அனைத்து சத்தும் பொருந்திய கஞ்சி

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • முட்டை இல்லா
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கம்பு 100 கிராம்
  2. கேழ்வரகு 100 கிராம்
  3. நிலக்கடலை 50 கிராம்
  4. பாதாம் 50 கிராம்
  5. முந்திரி 25 கிராம்
  6. சிவப்பரிசி 50 கிராம்
  7. பொட்டுக்கடலை 50 கிராம்
  8. முழு கோதுமை 50 கிராம்
  9. பச்சைப்பயறு 50கிராம்
  10. வெள்ளை உளுந்து 25 கிராம்
  11. கொண்டைக்கடலை 50 கிராம்
  12. சுக்கு சிறிய துண்டு
  13. ஏலக்காய் 5

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்தெடுக்கவும்
  2. அதிகம் சிவந்து விடாமல் வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும்
  3. வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் அல்லது மிஷினில் கொடுத்து அரைக்கவும்
  4. அரைத்த மாவை ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கரைக்கவும்
  5. கரைத்த மாவை அடிகனமான பாத்திரத்தில் வைத்து 5 நிமிடம் தொடர்ந்து கிளறி கொதிக்க விடவும்
  6. மாவின் மேல் பளபளப்பாக வரும் வரை கிளறவும்
  7. பின் தேவைக்கேற்ப பால் மற்றும் சர்க்கரை உப்பு சேர்த்து பரிமாறவும்
  8. ஒரு வயது குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு
  9. வெள்ளை சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்தால் சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்