வீடு / சமையல் குறிப்பு / உடைத்த முட்டை குழம்பு

Photo of Poached egg curry by Dhibiya Anand at BetterButter
336
0
0.0(0)
0

உடைத்த முட்டை குழம்பு

Aug-10-2018
Dhibiya Anand
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உடைத்த முட்டை குழம்பு செய்முறை பற்றி

Healthy food

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 4
  2. பெரிய வெங்காயம் 2 நறுக்கியது
  3. இஞ்சி பூண்டு விழுது
  4. தக்காளி ஒன்று பெரியது
  5. பச்சை மிளகாய் 2
  6. மஞ்சள் தூள்
  7. மல்லி தூள் ஒரு டீஸ்பூன்
  8. குழம்பு மிளகாய் தூள் 4 டீஸ்பூன்
  9. புளி ஒரு நெல்லிக்காய் அளவு
  10. தேங்காய் துருவல் 3 ஸ்பூன்
  11. சின்ன வெங்காயம் ஐந்து
  12. சோம்பு ஒரு ஸ்பூன்
  13. கடுகு சீரகம் வெந்தயம் தாளிக்க
  14. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும்
  2. பின்பு பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  3. பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. மஞ்சள் தூள் கொத்தமல்லி தூள் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கி பின்பு புளி கரைசலை இதனுடன் சேர்க்கவும்
  5. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
  6. சிறிது கொதி வந்தவுடன் தேங்காய் சோம்பு சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து இதனுடன் சேர்க்கவும்
  7. நன்கு கொதி வந்து பச்சை வாசனை போனவுடன் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி அதனை மெதுவாக ஒன்றன்பின் ஒன்றாக கொதிக்கும் கலவையில் ஊற்றவும்
  8. பின்பு அதனை கலக்காமல் 10 நிமிடம் மிதமான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்
  9. கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்