வீடு / சமையல் குறிப்பு / காய்கறி சாம்பார் சாதம்

Photo of Vegetable Sambar Rice by Sowmya Sundar at BetterButter
1355
0
0.0(0)
0

காய்கறி சாம்பார் சாதம்

Aug-12-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காய்கறி சாம்பார் சாதம் செய்முறை பற்றி

புதிதாக வறுத்து அரைத்த மசாலா சேர்த்து செய்த காய்கறி சாம்பார் சாதம்.புரோட்டீன் மற்றும் விட்டமின் நிறைந்த உணவு இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம் பருப்பு-1/2 கப்
  2. பச்சரிசி-1/2 கப்
  3. தண்ணீர்- 3 கப்
  4. சின்ன வெங்காயம்-10
  5. கலவை காய்கறிகள்(பீன்ஸ் கேரட் கத்திரிக்காய் முதலியன) சேர்த்து - 1 கப்
  6. புளி எலுமிச்சை அளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
  9. பெருங்காயம்-1/2 டீ ஸ்பூன்
  10. நல்லெண்ணெய்-1 கரண்டி
  11. கடுகு-1 டீ ஸ்பூன்
  12. வெந்தயம்-1/2 டீ ஸ்பூன்
  13. கறிவேப்பிலை மல்லி சிறிது
  14. வறுத்து அரைக்க
  15. கடலைப்பருப்பு-1 டேபிள் ஸ்பூன்
  16. மல்லி விதை-1 டேபிள் ஸ்பூன்
  17. மிளகாய் வற்றல்-6
  18. சீரகம்-1டீஸ்பூன்
  19. தேங்காய் துருவல்-1/4 கப்

வழிமுறைகள்

  1. குக்கரில் அரிசி மற்றும் பருப்பு சேர்த்து தண்ணீர் விட்டு குழைய வேக விடவும்
  2. கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  3. அதே கடாயில் மீதி எண்ணெய் விட்டு கடுகு ,வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின்னர் மற்ற காய்கறிகள் சேர்த்து லேசாக வதக்கி தண்ணீர் விட்டு வேக விடவும்.பாதி வெந்ததும் புளிகரைசல் விட்டு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து கொதிக்க விடவும்
  4. பின் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விட்டு வெந்த அரிசி பருப்பு மற்றும் நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
  5. கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்