வீடு / சமையல் குறிப்பு / குஜராத்தி பன்னீர் காந்த்வி

Photo of Gujarati Paneer Khandvi by Sowmya Sundar at BetterButter
498
3
0.0(0)
0

குஜராத்தி பன்னீர் காந்த்வி

Aug-12-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குஜராத்தி பன்னீர் காந்த்வி செய்முறை பற்றி

குஜராத்தின் சிறப்புமிக்க ஸ்னாக் ஆன காந்த்வியில் தேங்காய் துருவல் சேர்த்து செய்வார்கள். நான் மாறுதலுக்கு பன்னீரை ஸ்டஃப்பிங் செய்துள்ளேன்.கடலைமாவு,தயிர், பன்னீர் சேர்த்திருப்பதால் புரதச்சத்து நிறைந்த எண்ணெயில்லாத ஸ்னாக் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • குஜராத்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைமாவு- 1 கப்
  2. தயிர்- 1 கப்
  3. தண்ணீர்- 1 1/2 கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
  6. பெருங்காயபொடி-1/2 டீஸ்பூன்
  7. இஞ்சி பச்சை மிளகாய் விழுது-1 டீஸ்பூன்
  8. ஸ்டஃப்பிங் செய்ய
  9. பன்னீர் துருவல்-1/2 கப்
  10. மிளகு தூள்-1/2 டீஸ்பூன்
  11. கொத்தமல்லி தழை-ஒரு கைப்பிடி
  12. தாளிக்க
  13. எண்ணெய்-1 டீஸ்பூன்
  14. கடுகு-1 டீஸ்பூன்
  15. எள்- 1/2 டீஸ்பூன்
  16. கறிவேப்பிலை- சிறிது

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் கடலைமாவு, தயிர், தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலந்து கொள்ளவும்
  2. அதனுடன் மஞ்சள் தூள், இஞ்சி பச்சை மிளகாய் விழுது, பெருங்காய பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. கடாயில் இந்த கலவையை விட்டு கைவிடாமல் எட்டு முதல் பத்து நிமிடம் வரை நன்றாக கிளறவும்.
  4. ஒரு தட்டை திருப்பி ரெடியாக பக்கத்தில் வைத்து கொள்ளவும்
  5. கலவை ஒட்டாமல் வரும் போது அடுப்பை அணைத்து இந்த கலவையை ஒரு கரண்டியால் எடுத்து தட்டில் முழுவதும் பின்பக்கம் தடவவும்
  6. அதன் மேல் துருவிய பன்னீர்,கொத்தமல்லி தழை மற்றும் மிளகு தூள் தூவவும்
  7. இதை ஐந்து நிமிடம் ஆற வைத்து பின்னர் ஒரு கத்தியால் ஒரு இஞ்ச் அகலத்தில் கட் செய்து ஒவ்வொன்றாக சுருட்டவும்
  8. இப்படி அனைத்தும் சுருட்டி ஒரு தட்டில் அடுக்கி கொள்ளவும்
  9. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, எள் மற்றும் கறிவேப்பிலை தாளித்து காந்த்வியின் மேல் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்