வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு தயிர் சப்பாத்தி

Photo of Horse gram dagi chapathi by Krishnasamy Vidya Valli at BetterButter
443
0
0.0(0)
0

கொள்ளு தயிர் சப்பாத்தி

Aug-14-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு தயிர் சப்பாத்தி செய்முறை பற்றி

உடலுக்கு வலு சேர்க்கும் புரதசத்து மட்டுமல்ல எடை குறைப்பிற்கும் ஏற்றது கொள்ளு. அதை வைத்து செய்யும் எளிமையான சப்பாத்தி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கொள்ளு 1/8 கப்
  2. மல்டி கிரெய்ன் ஆட்டா மாவு 1/8 கப்
  3. தயிர் 2 மேஜைக்கரண்டி
  4. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. உப்பு கால் தேக்கரண்டி
  7. பெருங்காயம் நான்கு சிட்டிகை
  8. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  9. சப்பாத்தி வாட்டுவதற்கு தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய்

வழிமுறைகள்

  1. கொள்ளை 10 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குக்கரில் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. அதோடு இஞ்சி பச்சை மிளகாய் பெருங்காயம் தயிர் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  3. அரைத்த விழுதுடன் கொத்தமல்லி இலை மல்டி கிரெய்ன் ஆட்டா மாவு சேர்த்து பிசைந்து சப்பாத்தியாக இட்டுக்கொள்ளவும்
  4. தோசைக்கல்லில் எண்ணெய் அல்லது நெய் விட்டு வாட்டி எடுக்கவும்
  5. தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்