வீடு / சமையல் குறிப்பு / சாம்பார் சாதம்

Photo of Sambar sadham by Dhibiya Anand at BetterButter
497
0
0.0(0)
0

சாம்பார் சாதம்

Aug-14-2018
Dhibiya Anand
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாம்பார் சாதம் செய்முறை பற்றி

Rich protein

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி 2 கப் ( 1 கப் = 125 ml)
  2. துவரம் பருப்பு முக்கால் கப்
  3. சின்ன வெங்காயம் 20
  4. கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பூசணிக்காய் தேவையான அளவு
  5. தக்காளி-2
  6. முருங்கைக்காய் 2
  7. புளிக்கரைசல் ஒரு கப்
  8. மஞ்சள் தூள்
  9. உப்பு தேவையான அளவு
  10. நெய் 4 ஸ்பூன்
  11. பூண்டு 6 பல்
  12. கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை சிறிதளவு
  13. வறுத்து அரைக்க
  14. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
  15. உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  16. கொத்தமல்லி 2 ஸ்பூன்
  17. வெந்தயம் அரை ஸ்பூன்
  18. சீரகம் அரை ஸ்பூன்
  19. மிளகு கால் ஸ்பூன்
  20. பெருங்காயத்தூள் சிறிதளவு
  21. தேங்காய்த்துருவல் 3 ஸ்பூன்
  22. வரமிளகாய் 7
  23. என்னை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் அரிசியையும் பருப்பையும் 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்துக் கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி பூண்டு வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. சிறிதளவு வதங்கிய உடன் விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்த்து மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொள்ளவும்
  5. சிறிது வதங்கியவுடன் அரைத்த மசாலாவை இத்துடன் சேர்த்து புளிக்கரைசலை சேர்த்து கொள்ளவும்
  6. 5 நிமிடம் கழித்து அரிசி பருப்பு இரண்டையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்
  7. ஒரு கப் அரிசி பருப்புக்கு இரண்டரை கப் தண்ணீர் என்ற வீதம் எடுத்துக் கொள்ளவும்
  8. புளிக்கரைசலின் அளவையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளவும் ஒரு பங்கு தண்ணீர் மற்றும் அதிகம் ஊற்ற வேண்டும்
  9. அப்பொழுது தான் சாதம் நன்றாக குழைவாக வரும்
  10. கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும்
  11. சிறிது கொதிக்க ஆரம்பித்தவுடன் நெய் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் விடவும்
  12. சாம்பார் சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்