வீடு / சமையல் குறிப்பு / கடலைப்பருப்பு காலிப்ளவர் கூட்டு

Photo of Kadalai Paruppu Cauliflower Koottu by Jayasakthi Ekambaram at BetterButter
791
0
0.0(0)
0

கடலைப்பருப்பு காலிப்ளவர் கூட்டு

Aug-14-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கடலைப்பருப்பு காலிப்ளவர் கூட்டு செய்முறை பற்றி

கடலைப் பருப்பும் காலிஃப்ளவரும் சேர்த்து செய்யும் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிறிய காலிஃப்ளவர் ஒன்று
  2. கடலை பருப்பு நூறு கிராம்
  3. வெங்காயம் ஒன்று
  4. பெரிய தக்காளி ஒன்று
  5. கடுகு ஒரு ஸ்பூன்
  6. சீரகம் அரை டீஸ்பூன்
  7. சோம்புத்தூள் அரை ஸ்பூன்
  8. கறிவேப்பிலை ஒரு கொத்து
  9. குழம்பு மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  10. எண்ணெய் 3ஸ்பூன்
  11. தேங்காய்த்துருவல் 4 ஸ்பூன்
  12. உப்புத்தூள் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவரை சுடு தண்ணீரில் உப்பு போட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்
  2. தண்ணீரை வடிகட்டி நன்றாக கழுவிக் கொள்ளவும்
  3. கடலைப் பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்
  4. வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் தாளிக்கவும்
  6. வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்
  7. சோம்பு தூளை போடவும்
  8. தக்காளியை போட்டு கூழாகும் வரை வதக்கவும்
  9. காலிஃப்ளவரை போட்டு வதக்கவும்
  10. வெந்த கடலை பருப்பு அதன் மேல் கொட்டவும்
  11. மிளகாய் தூள் உப்பு தூள் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்
  12. காய் வெந்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
  13. கூட்டு கெட்டி பதம் வந்த உடன் தேங்காய்த்துருவலை தூவ வேண்டும்
  14. கொத்தமல்லி தழை தூவ வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்