வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் புலாவ்

Photo of Vegetable pulao by saranya sathish at BetterButter
393
1
0.0(0)
0

வெஜிடபிள் புலாவ்

Aug-15-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் புலாவ் செய்முறை பற்றி

வெஜிடபிள் புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி ஒரு கப்
  2. கேரட் ஒன்று
  3. பட்டாணி அரை கப்
  4. உருளைக்கிழங்கு ஒன்று
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. உப்பு ஒரு டீஸ்பூன்
  7. சீரகம் ஒரு டீஸ்பூன்
  8. நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  9. கரம் மசாலா அரை டீஸ்பூன்
  10. பட்டை கிராம்பு ஏலக்காய் - தலா 2
  11. பிரியாணி இலை 1
  12. தண்ணீர் ஒரு கப்

வழிமுறைகள்

  1. முதலில் பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி சிறிது வெதுவெதுப்பான நீரில் ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்க்கவும் நெய் உருகியதும் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சீரகம் பிரியாணி இலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  3. பின்னர் அதில் நறுக்கிய கேரட் உருளைக்கிழங்கு பட்டாணி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  4. பின் உப்பு கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும்.
  5. இப்பொழுது ஊற வைத்து தண்ணீர் வடித்த பாஸ்மதி அரிசியை சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கலந்து கொள்ளவும்.
  6. பின் தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரை மூடி 3 விசில் விட்டு பின்னர் அடுப்பை அணைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்