வீடு / சமையல் குறிப்பு / பச்சைப்பயிறு இட்லி (இனிப்பு மற்றும் காரம்),தட்டைப்பயிறு இட்லி (இனிப்பு மற்றும் காரம்),இனிப்பு பூரணம் இட்லி

Photo of Variety idli by Surya Rajan at BetterButter
522
1
0.0(0)
0

பச்சைப்பயிறு இட்லி (இனிப்பு மற்றும் காரம்),தட்டைப்பயிறு இட்லி (இனிப்பு மற்றும் காரம்),இனிப்பு பூரணம் இட்லி

Aug-17-2018
Surya Rajan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பச்சைப்பயிறு இட்லி (இனிப்பு மற்றும் காரம்),தட்டைப்பயிறு இட்லி (இனிப்பு மற்றும் காரம்),இனிப்பு பூரணம் இட்லி செய்முறை பற்றி

சத்துக்கள் நிறைந்த விதவிதமான இட்லிகளை டிபனாக கொடுக்கலாம் இதனை பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம் செல்லும் பெரியவர்கள் வரை எடுத்துச் செல்லலாம் பார்க்கவும் சாப்பிடவும் வித்தியாசமாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சைப்பயிறு (தட்டைப்பயிறு) இட்லி செய்வதற்கு
  2. பச்சைப்பயறு (தட்டைப்பயிறு) ஒரு கப்
  3. உளுந்து அரை கப்
  4. இட்லி அரிசி அரை கப்
  5. வெந்தயம் அரை ஸ்பூன்
  6. உப்பு சிறிதளவு
  7. மிளகாய் ஒன்று
  8. எண்ணெய் ஒரு ஸ்பூன்
  9. கடுகு அரை ஸ்பூன்
  10. வெங்காயம் ஒன்று
  11. நாட்டு சர்க்கரை தேவையான அளவு
  12. இனிப்பு பூரணம் இட்லி செய்வதற்கு
  13. பச்சரிசி ஒரு கப்
  14. உளுந்து அரை கப்
  15. தேங்காய் துருவல் அரை கப்
  16. வெந்தயம் ஒரு ஸ்பூன்
  17. உப்பு சிறிதளவு
  18. பூரணம் செய்வதற்கு
  19. பாசிப்பருப்பு ஒரு கப்
  20. வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை தேவையான அளவு
  21. தேங்காய் துருவல் அரை கப்

வழிமுறைகள்

  1. பச்சைப்பயிறு (தட்டைப்பயிறு) இட்லி செய்வதற்கு
  2. பச்சை பயிறு (தட்டைப்பயிறு) எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்
  3. உளுந்து மற்றும் வெந்தயம் இட்லி அரிசி ஆகியவற்றை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  4. பின் அவற்றை தனித்தனியே அரைத்து ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்துக் கலக்கி எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்
  5. பின் அவற்றை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கவும்
  6. கார இட்லிக்கு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பொடியாக நறுக்கிய மிளகாய் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி அவற்றை மாவில் சேர்த்து கலக்கி தனியே வைக்கவும் அலங்கரிக்க சிறிது பச்சை பயறு மேலே தூவவும்
  7. இனிப்பு இட்லிக்கு மற்றொரு பாதியில் நாட்டுச்சர்க்கரை தேவையெனில் பொடி செய்த ஏலக்காய் சேர்த்து கலந்து தனியே வைக்கவும்
  8. இதேபோல் தட்டைப்பயிறு இட்லிக்கும் செய்யவும்
  9. பின் இவற்றை இட்லி பாத்திரத்தில் ஊற்றி 10 முதல் 15 நிமிடம் வரை மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்
  10. இனிப்பு பூரணம் இட்லி செய்வதற்கு பச்சரிசி உளுந்து தேங்காய் வெங்காயம் ஆகியவற்றை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  11. பின் தேவையான உப்பு சேர்த்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்
  12. பாசிப்பருப்பினை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  13. பின் அதனுடன் தேங்காய் துருவல் பொடித்த சர்க்கரை சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ளவும்
  14. பின் இட்லி பாத்திரத்தில் அரை கரண்டி இட்லி மாவை ஊற்றி அதன் மேல் மேலே தயார் செய்த பூரணம் அரை கரண்டி வைத்து அதன் மேல் அரைக்கரண்டி இட்லி மாவினை ஊற்றவும்
  15. பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்