வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் சப்பாத்தி ஸ்வீட் ரோல்ஸ்

Photo of Apple Chapathi Sweet Rolls by Sowmya Sundar at BetterButter
758
1
0.0(0)
0

ஆப்பிள் சப்பாத்தி ஸ்வீட் ரோல்ஸ்

Aug-18-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் சப்பாத்தி ஸ்வீட் ரோல்ஸ் செய்முறை பற்றி

ஆப்பிள் அரைத்து சப்பாத்தி செய்து அதில் தேங்காய் பூரணம் அடைத்து செய்யும் பதார்த்தம் இது.பழங்கள் சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.ஏனெனில் அரைத்து சேர்ப்பதால் அவர்களுக்கு தெரியாது.பெரியவர்களுக்கும் இது ஆரோக்கியமான டிபன் வெரைட்டி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • பான் பிரை
  • ப்லெண்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு-1 கப்
  2. ஆப்பிள் -1 பெரியது (அல்லது 2 சிறியது)
  3. நெய்/ எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்+ சப்பாத்தி வாட்ட சிறிது
  4. உப்பு சிட்டிகை அளவு
  5. பூரணம் செய்ய
  6. தேங்காய் துருவல்- 1/2 கப்
  7. தேன்-1 டேபிள் ஸ்பூன்
  8. ஏலக்காய் பொடி-1/8 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஆப்பிளை தோல் சீவி நறுக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  2. பாத்திரத்தில் ஆப்பிள் விழுது, கோதுமை மாவு,உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்/நெய் சேர்த்து தண்ணீர் விடாமல் பிசைந்து கொள்ளவும். தேவைபட்டால் மட்டுமே சிறிது தண்ணீர் தெளித்து பிசையவும்
  3. மாவை உருண்டைகளாக்கி சிறிய சப்பாத்திகளாக தேய்த்து கொள்ளவும்.
  4. சூடாக தவாவில தேய்த்த சப்பாத்தியை போட்டு மிதமான தீயில் சிறிது எண்ணெய் விட்டு நன்றாக வேக வைத்து எடுக்கவும்
  5. தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். பூரணம் தயார்
  6. தட்டில் ஒரு சப்பாத்தியை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் பூரணம் வைத்து நன்றாக சுருட்டி கொள்ளவும்.
  7. இதே போல அனைத்து சப்பாத்தியும் ஸ்டஃப் செய்து கொள்ளவும்
  8. சப்பாத்தி ரோலை கட் செய்து டிபன் பாக்ஸில் அடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்