வீடு / சமையல் குறிப்பு / ரஸ்க் ஃப்ரைடு ரைஸ்

Photo of Rusk fried rice by mano langra at BetterButter
711
1
0.0(0)
0

ரஸ்க் ஃப்ரைடு ரைஸ்

Aug-19-2018
mano langra
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ரஸ்க் ஃப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

எளிய காலை மற்றும் மதிய உணவு, குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைக்கும் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வடித்த சாதம் 1 கப்
  2. ரஸ்க் 2 சிறிய அளவில் வெட்டிக்கொள்ளவும்
  3. திராட்சை முந்திரி 1 கப்
  4. நறுக்கிய வெங்காயம் 1 கப்
  5. நறுக்கிய பச்சை மிளகாய் 2
  6. தக்காளி சாஸ் 2டீஸ்பூன்
  7. சோயா சாஸ் 2டீஸ்பூன்
  8. மிளகாய் சாஸ் 2டீஸ்பூன்
  9. சமையல் எண்ணெய் 1டீஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. சர்க்கரை சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஸ்டேப் 1 ரஸ்க் துண்டுகளை வாணலியில் சிறிது நெய் விட்டு நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  2. ஸ்டேப் 2 வாணலியில் சிறிது நெய் விட்டு திராட்சை முந்திரி வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  3. ஸ்டேப் 3 வாணலியில் 1டீஸ்பூன் சமையல் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன் நிறமாக வதாக்கவும்
  4. ஸ்டேப் 4 வெங்காயம் வதங்கியதும் எடுத்து வைத்த தக்காளி , சோயா மற்றும் மிளகாய் சாஸ் சேர்த்து சர்க்கரையும் சேர்க்கவும்
  5. ஸ்டேப் 5 20 வினாடிக்கு பின்பு உப்பு சேரக்கவும். வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்.
  6. ஸ்டேப் 6 வறுத்த முந்திரி திராட்சை மற்றும் ரஸ்க் சேர்த்து கிளறி பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்