வீடு / சமையல் குறிப்பு / அவல் புலாவ்

Photo of poha pulav by Sathya Vijay at BetterButter
208
1
0.0(0)
0

அவல் புலாவ்

Aug-20-2018
Sathya Vijay
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவல் புலாவ் செய்முறை பற்றி

அவல் புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கெட்டி அவல் 200 கிராம்
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. இஞ்சி பொடியாக நறுக்கியது ஒரு ஸ்பூன்
  5. பூண்டு பொடியாக நறுக்கியது ஒரு ஸ்பூன்
  6. மிக்ஸ்டு வெஜிடபிள் அரை கப்
  7. எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
  8. கருவேப்பிலை
  9. கடுகு
  10. சீரகம் அரை ஸ்பூன்
  11. பச்சை மிளகாய் 2
  12. உளுந்து அரை ஸ்பூன்
  13. கடலைப்பருப்பு அரை ஸ்பூன்
  14. உப்பு தேவைக்கேற்ப
  15. துருவிய தேங்காய் நான்கு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் கெட்டி அவலை நன்கு கழுவி சிறிது நீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. தவாவில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டுக் கொள்ளவும்
  3. அதில் கடுகு கருவேப்பிலை பருப்பு சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்
  4. பிறகு பொடியாக நறுக்கிய பூண்டு இஞ்சி சேர்த்து வதக்கவும்
  5. பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்
  6. இப்பொழுது வேக வைத்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும்
  7. இதனுடன் ஊறவைத்த அவலை சேர்த்து கொள்ளவும்
  8. இப்பொழுது சிறிதளவு உப்பு மிளகு தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  9. 5 நிமிடம் மூடி போட்டு சிம்மில் வைக்கவும்
  10. இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளவும்
  11. இப்பொழுது சுவையான அவல் புலாவ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்