வீடு / சமையல் குறிப்பு / ஸ்டஃப்ட் டேட்ஸ் பராத்தா

Photo of Stuffed Dates Paratha by Sowmya Sundar at BetterButter
438
0
0.0(0)
0

ஸ்டஃப்ட் டேட்ஸ் பராத்தா

Aug-20-2018
Sowmya Sundar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்டஃப்ட் டேட்ஸ் பராத்தா செய்முறை பற்றி

பேரிச்சம்பழத்தை அரைத்து பூரணமாக பொதிந்து செய்யும் பராத்தா இது.இரும்பு சத்து நிறைந்த இந்த டிபனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
  3. பேரிச்சம்பழம் ஒரு கப்
  4. பால் அரை கப்
  5. உப்பு ஒரு சிட்டிகை
  6. எண்ணெய் அல்லது நெய் சிறிதளவு வாட்ட

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் கோதுமை மாவு உப்பு ,ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து பிசையலாம்.
  2. பேரிச்சம்பழத்தை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.பின்னர் அதை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  3. மாவை உருண்டைகளாக்கி தேய்த்து அதன் நடுவில் ஒரு உருண்டை பேரிச்சம்பழ ஸ்டஃப்பிங்கை வைத்து மூடவும்
  4. அதை மறுபடியும் சிறிது கனமாக தேய்த்து கொள்ளவும்.இதே போல அனைத்தும் செய்து கொள்ளவும்
  5. தவா சூடானதும் ஒவ்வொரு பராத்தாகளாக போட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு நன்றாக வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  6. சுவையான டேட்ஸ் பராத்தா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்