வீடு / சமையல் குறிப்பு / காலிஃப்ளவர் ஸ்பெஷல் : காலிஃப்ளவர் ரைஸ், காலிஃப்ளவர் வறுவல் மற்றும் சில்லி காளிப்ளவர்

Photo of Cauliflower special : Cauliflower rice, cauliflower varuval and chilli cauliflower by Surya Rajan at BetterButter
1019
0
0.0(0)
0

காலிஃப்ளவர் ஸ்பெஷல் : காலிஃப்ளவர் ரைஸ், காலிஃப்ளவர் வறுவல் மற்றும் சில்லி காளிப்ளவர்

Aug-20-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காலிஃப்ளவர் ஸ்பெஷல் : காலிஃப்ளவர் ரைஸ், காலிஃப்ளவர் வறுவல் மற்றும் சில்லி காளிப்ளவர் செய்முறை பற்றி

காலிஃப்ளவர் கொண்டு செய்யப்படும் சுவையான ரெசிப்பி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்புவர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காலிஃப்ளவர் ரைஸ் செய்வதற்கு
  2. வடித்த சாதம் ஒரு கப்
  3. காலிஃப்ளவர் தேவையான அளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. பெரிய வெங்காயம் ஒன்று
  6. பூண்டு விழுது அரை டீஸ்பூன்
  7. மிளகுத்தூள் அரைஸ்பூன்
  8. கருவேப்பிலை சிறிதளவு
  9. கொத்தமல்லித்தழை சிறிதளவு
  10. தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன்
  11. கடுகு அரை ஸ்பூன்
  12. மிளகாய் ஒன்று
  13. காலிஃப்ளவர் வறுவல் செய்வதற்கு
  14. காலிஃப்ளவர் தேவையான அளவு
  15. உப்பு தேவையான அளவு
  16. இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்
  17. சிவப்பு மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  18. கறி மசாலா அரை ஸ்பூன்
  19. கொத்தமல்லி தழை சிறிதளவு
  20. பெரிய வெங்காயம் ஒன்று
  21. தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
  22. சில்லி காலிஃளார் செய்வதற்கு
  23. காலிஃளார் தேவையான அளவு
  24. உப்பு தேவையான அளவு
  25. எண்ணெய் பொரிப்பதற்கு
  26. கடலை மாவு 3 ஸ்பூன்
  27. சோளமாவு இரண்டு ஸ்பூன்
  28. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  29. சிவப்பு மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  30. சோயா சாஸ் அரை ஸ்பூன்
  31. பெரிய வெங்காயம் ஒன்று
  32. கொத்தமல்லித்தழை சிறிதளவு
  33. மிளகாய் அல்லது குடைமிளகாய் ஒன்று

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவர் ரைஸ் செய்வதற்கு...
  2. காலிஃப்ளவரை நன்றாக சுத்தம் செய்து துருவி எடுத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. பின் துருவிய காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும்
  5. பின் தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்
  6. காய் நன்றாக வெந்ததும் கொத்தமல்லித் தழை சேர்த்து வடித்த சாதம் சேர்த்துக் கிளறவும்
  7. காலிஃப்ளவர் வறுவல் செய்வதற்கு...
  8. காலிஃப்ளவரின் சூடான தண்ணீரில் 5 நிமிடம் போட்டு சிறிய சிறிய பூக்களாக எடுத்துக் கொள்ளவும்
  9. கடாயில் எண்ணெய் விட்டு கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  10. பின் இஞ்சி பூண்டு உப்பு சேர்த்து வதக்கவும்
  11. பின் சிவப்பு மிளகாய் தூள், கறி மசாலா சேர்த்து வதக்கவும்
  12. பின் சிறிய காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை வேகவைக்கவும்
  13. பின் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்
  14. சில்லி காலிபிளவர் செய்வதற்கு...
  15. காலிஃப்ளவரை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
  16. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு சிவப்பு மிளகாய் தூள் தேவையான உப்பு அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கால் துண்டுகளை சேர்த்து பிசைந்து வைக்கவும்
  17. எண்ணெய் சூடு செய்து காலிஃப்ளவர் துண்டுகளை பொரித்து எடுக்கவும்
  18. கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் மிளகாய் அல்லது குடை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  19. பின் இஞ்சி பூண்டு விழுது உப்பு சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  20. பின் சோயா சாஸ் சேர்த்து பொரித்து வைத்த காகித துண்டுகளை சேர்த்துக் கிளறவும்
  21. இறுதியாக கொத்தமல்லி தலை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்