வீடு / சமையல் குறிப்பு / இறால் தம் பிரியாணி

Photo of Prawn dum biryani by Munsila Fathima at BetterButter
433
0
0.0(0)
0

இறால் தம் பிரியாணி

Aug-20-2018
Munsila Fathima
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இறால் தம் பிரியாணி செய்முறை பற்றி

கடல் உணவு பிரியர்களை வாய் ஊற செய்வது இந்த இறால் பிரியாணி.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • இந்திய
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி அரை கிலோ
  2. இறால் சுத்தம் செய்தது 400 கிராம்
  3. வெங்காயம் 200 கிராம்
  4. தக்காளி 200 கிராம்
  5. இஞ்சி பூண்டு விழுது 50 கிராம்
  6. தயிர் 50 கிராம்
  7. பச்சை மிளகாய் 4
  8. மல்லி புதினா இலை சிறிதளவு
  9. சிவப்பு மிளகாய் தூள் அரை மேசைக்கரண்டி அளவு
  10. உப்பு தேவைக்கு
  11. கடலை எண்ணெய் 100 கிராம்
  12. நெய் 25 கிராம்
  13. சிவப்பு நிறமூட்டி
  14. பட்டை கிராம்பு இரண்டு அல்லது மூன்று வீதம் சேர்த்துக் கொள்ளுங்கள்
  15. ஏலக்காய் 4

வழிமுறைகள்

  1. இறாலுடன் கொடுக்கப்பட்டுள்ள சிவப்பு மிளகாய் தூளில் பாதி சேர்த்து சிறிதளவு உப்பு சிவப்பு நிற மூட்டி தயிர் சிறிதளவு சேர்த்து 25 நிமிடம் குழிற்பெட்டியில்*பிரிட்ஜ்) ஊற வைத்து கொள்ளுங்கள்.
  2. அரிசியை 25 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும் மணம் வந்தவுடன் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. இறால் சீக்கிரம் வெந்து விடும் என்பதால் மற்றொரு பாத்திரத்தில் சாதம் வேக வைப்பதற்கு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்
  5. வெங்காயம் நன்கு சிவந்து வரும்போது இஞ்சி பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கிக் கொள்ளுங்கள்
  6. பின் அதனுடன் தக்காளி உப்பு, மீதமுள்ள சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  7. ஏற்கெனவே இராளில் உப்பு சேர்த்து உள்ளதால் தக்காளியுடன் சேர்க்கும்போது பார்த்து சேர்த்துக் கொள்ளவும்
  8. மற்றொருபுறம் தண்ணீர் கொதி வந்தவுடன் ஊற வைத்த அரிசியை அதில் சேருங்கள்
  9. அந்த அரிசிக்கு தேவையான உப்பை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்
  10. மற்றொருபுறம் தக்காளி நன்கு வதங்கிய பின் ஊற வைத்த இறால் மற்றும் மீதமுள்ள தயிரை சேருங்கள்.
  11. மற்றொருபுறம் அரிசி வெந்து விட்டதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்
  12. அரிசி அதிகம் வெந்த விடவும் கூடாது முல்லாவும் இருக்கக் கூடாது
  13. அரிசி சரியான பதத்துக்கு வெந்ததும் அதனை வடித்துக்கொள்ளுங்கள்
  14. இறால் முக்கால் வேக்காடு வெந்திருக்கும்
  15. இப்பொழுது தம் கல் சேர்த்து அதன் மேல் இந்த பாத்திரத்தை வையுங்கள்
  16. வெந்த அரிசியை இந்த இறால் கிரேவி உடன் சேர்த்து மற்றும் நெய் சேர்த்து கொள்ளுங்கள்
  17. இதை மூடி வைத்து ஒரு 20 நிமிடம் அப்படியே தம் போட்டுக் கொள்ளுங்கள்
  18. 20 நிமிடம் கழித்து ஒரு பத்து நிமிடம் மூடியை திறக்காமல் அப்படியே மூடி வைத்துக் கொள்ளுங்கள்
  19. சுவையான இறால் பிரியாணி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்