வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு கிச்சடி

Photo of Moongdal Kichadi by Sowmya Sundar at BetterButter
625
1
0.0(0)
0

பாசிப்பருப்பு கிச்சடி

Aug-21-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு கிச்சடி செய்முறை பற்றி

பாசிப்பருப்பு ,அரிசி மற்றும் காய்கறி சேர்த்து செய்த கிச்சடி. ஒன் பாட் மீல் ஆன இதை குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசிப்பருப்பு அரை கப்
  2. அரிசி அரை கப்
  3. தண்ணீர் 3 1/2 கப்
  4. நெய் - 1 டேபிள்ஸ்பூன்
  5. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  6. கடுகு சீரகம் தலா ஒரு டீஸ்பூன்
  7. கறிவேப்பிலை மல்லி சிறிது
  8. பச்சை மிளகாய் 2
  9. இஞ்சி ஒரு துண்டு
  10. பூண்டு 2 பல்
  11. பெரிய வெங்காயம் ஒன்று
  12. தக்காளி ஒன்று
  13. குடைமிளகாய் ஒன்று
  14. மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
  15. மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன்
  16. தனியா தூள் கால் டீஸ்பூன்
  17. உப்பு தேவையான அளவு
  18. எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் நெய் , எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. அதனுடன் மஞ்சள்தூள்,உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்
  3. சிறிது வதங்கியதும் களைந்த அரிசி பருப்பை சேர்த்து தண்ணீர் விட்டு குக்கரை மூடி 3 விசில் வரை வேக விடவும்
  4. குக்கரை திறந்து கொத்தமல்லி தழை , எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்