வீடு / சமையல் குறிப்பு / வெஜ் மஞ்சூரியன் பிராங்கி

Photo of Veg manchurian frankie by Surya Rajan at BetterButter
630
0
0.0(0)
0

வெஜ் மஞ்சூரியன் பிராங்கி

Aug-23-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜ் மஞ்சூரியன் பிராங்கி செய்முறை பற்றி

காய்கறிகள் கொண்டு செய்யப்படும் இந்த சுவையான ரெசிப்பி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்புவர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சப்பாத்தி 2
  2. முட்டை ஒன்று
  3. காலிஃளார் ஒரு கப்
  4. உருளைக்கிழங்கு 2
  5. பனீர் அரை கப்
  6. உப்பு தேவையான அளவு
  7. பெரிய வெங்காயம் ஒன்று
  8. சில்லி சாஸ் ஒரு ஸ்பூன்
  9. சோயா சாஸ் அரை ஸ்பூன்
  10. கடலை மாவு 1 ஸ்பூன்
  11. அரிசி மாவு ஒரு ஸ்பூன்
  12. இஞ்சி-பூண்டு விழுது அரை ஸ்பூன்
  13. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  14. சீஸ் சிறிதளவு
  15. மயோனைஸ் தேவை எனில்
  16. கொத்தமல்லித்தழை சிறிதளவு
  17. தேங்காய் எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. மஞ்சூரியன் செய்வதற்கு
  2. காலிஃப்ளவரை சுத்தம் செய்து சிறிய சிறிய பூக்களாக எடுத்துக் கொள்ளவும்
  3. சூடான கொதிக்கும் நீரில் 5 நிமிடம் காலிஃப்ளவர் மற்றும் உருளைக்கிழங்கை போட்டு வைக்கவும்
  4. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு உப்பு மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. பின் பனீர் காலிஃப்ளவர் உருளைக் கிழங்கு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  6. பின் என்னை சூடு செய்து அவற்றை பொரித்து எடுக்கவும்
  7. கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  8. பின் பொரித்தெடுத்த காய்கறிகளை சேர்த்து தேவையான உப்பு சோயா சாஸ் சில்லி சாஸ் கலந்து 2 நிமிடம் கிளறவும்
  9. கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்
  10. பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்
  11. குறைந்த தீயில் தோசைக்கல்லில் சப்பாத்திகளைப் வைத்து அதன் மேல் முட்டையை ஊற்றி திருப்பி போட்டு வேகவிடவும்
  12. இதனை தயார் செய்த மஞ்சூரியன் கலவை துருவிய சீஸ் வைத்து ரோல் செய்யவும்
  13. அதன் மேல் துருவிய சீஸ் அல்லது மயோனைஸ் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்