வீடு / சமையல் குறிப்பு / மண்பானை மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல்

Photo of Terracotta Fish Gravy & Fish Fry by Jeba Jayaseelan at BetterButter
713
1
5.0(0)
0

மண்பானை மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல்

Aug-25-2018
Jeba Jayaseelan
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மண்பானை மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்முறை பற்றி

சுவையான மண்மணம் மாறா மீன் குழம்பு மற்றும் மீன் வருவல், ஜிரணத்திற்கு கிஸ்மஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சீலா மீன் அரை கிலோ
  2. புளிக்கரைசல் ஒரு கப்
  3. மஞ்சள் தூள் 2 மேஜைக்கரண்டி
  4. வத்தல் பொடி ஒரு மேஜைக்கரண்டி
  5. கொத்தமல்லி பொடி 2 மேசைக்கரண்டி
  6. தக்காளி-3
  7. சின்ன வெங்காயம் 15
  8. பச்சை மிளகாய் 2
  9. தேங்காய் எண்ணெய் தேவைக்கேற்ப
  10. உப்பு சிறிதளவு
  11. கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி
  12. தேங்காய் துருவல் ஒரு கப்
  13. பூண்டு 7 பல்

வழிமுறைகள்

  1. மீனை நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூளுடன் மீனை கிளறி வைக்கவும்
  2. ஒரு வெங்காயம் ஒரு தக்காளி ஒரு பச்சை மிளகாய் போன்றவற்றை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்
  3. ஒரு மண் பாத்திரத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு அடுப்பில் மிதமான சூட்டில் வைக்கவும்
  4. எண்ணெய் காய்ந்தவுடன் தேங்காய்,வெங்காயம் பூண்டு,தக்காளி,சீரகம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்
  5. வதக்கியவற்றை ஆற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  6. மீதமிருக்கும் வெங்காயம் தக்காளி பூண்டு மற்றும் பச்சை மிளகாய் வெட்டி வைக்கவும்
  7. மண்பானையில் எண்ணெய் விட்டு காய விடவும்
  8. வெந்தயம் கடுகு கருவேப்பிலை போட்டு நன்றாக தாளிக்கவும்
  9. பூண்டு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
  10. அதனுடன் தக்காளி உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்
  11. அரைத்து வைத்த விழுதை மண்பாத்திரத்தில் சேர்த்து நன்றாக வதக்கவும்
  12. புளிக் கரைசலை இதனுடன் சேர்த்து கொதிக்க விடவும்
  13. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழம்பை நன்றாக கொதிக்க விடவும்
  14. குழம்பு கொதித்த உடன் கழுவி வைத்த மீன்களை சேர்க்கவும்
  15. என்னை தனியாக குழம்பின் பிரிந்து வரும் நிலையில் கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடவும்
  16. மண்பானை மீன் குழம்பு தயார்
  17. மீன் வருவல்
  18. ஒரு பாத்திரத்தில் கொத்தமல்லி பொடி மஞ்சள் பொடி மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்
  19. இதனுடன் கழுவி வைத்த மீன் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் ஊற விடவும்
  20. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் காய விடவும்
  21. எண்ணை காய்ந்தவுடன் மீன் துண்டுகளை அதனுள் போடவும்
  22. பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்கவும்
  23. மீன் வறுவல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்