வீடு / சமையல் குறிப்பு / பிரெட் பன்னீர் ரோல்ஸ்...

Photo of BREAD PANEER ROLLS.... by fairose banu at BetterButter
248
2
0.0(0)
0

பிரெட் பன்னீர் ரோல்ஸ்...

Aug-27-2018
fairose banu
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரெட் பன்னீர் ரோல்ஸ்... செய்முறை பற்றி

மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு டிபன் பாக்ஸ் ரெசிப்பி...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பன்னீர் 200 கிராம்
  2. பிரெட் 4
  3. எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  4. பட்டர்
  5. இஞ்சி பூண்டு விழுது இரண்டு மேஜைக்கரண்டி
  6. மிளகாய் தூள் ஒரு மேஜைக்கரண்டி
  7. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
  8. கரம் மசாலா தூள் 1 1/2 மேஜைக்கரண்டி
  9. கேரட் 1 துருவியது
  10. குடமிளகாய் 1 பொடியாக நறுக்கியது
  11. வெங்காயம் பாதி பொடியாக நறுக்கியது
  12. தக்காளி 1 பொடியாக நறுக்கியது
  13. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்..
  2. அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும்
  3. நன்கு வதங்கியவுடன் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின்பு அதில் கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. இப்பொழுது அதில் உப்பு தேவைக்கு ஏற்ப சேர்க்கவும்
  6. பின்பு அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறவும்
  7. நன்கு கிளறியவுடன் அதில் பன்னீரை துருவலை சேர்த்துக் கொள்ள வேண்டும்
  8. பன்னீர் வேகுவதற்கு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைக்க வேண்டும்
  9. பன்னீர் நன்கு வதங்கியவுடன் அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  10. நாம் தனியாக வைத்துல மசாலாவில் சிறிது அளவு எடுத்து பிரெட்டின் ஓரத்தில் வைத்து நன்றாக பிரெட்டை சுருட்டவும்...
  11. பின்பு ஒரு தவாவில் சிறிதளவு பட்டர் சேர்க்கவும்
  12. அதில் நாம் தனியாக எடுத்து வைத்துள்ள பிரெட் பன்னீர் ரோலை நன்கு டோஸ்ட் செய்ய வேண்டும்...
  13. இப்பொழுது " பிரெட் பன்னீர் ரோல்ஸ்" தயார்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்