வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு சாதம்

Photo of Potato rice by Rachell Revathi Samuel at BetterButter
397
1
0.0(0)
0

உருளைக்கிழங்கு சாதம்

Aug-28-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு சாதம் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சாதம் 1/2 கப்
  2. உருளைக்கிழங்கு 2
  3. எண்ணெய் 5 ஸ்பூன்
  4. வெங்காயம் 1
  5. கருவேப்பிலை சிறிது
  6. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  7. கரம் மசாலா 1 ஸ்பூன்
  8. மிளகு சீரகத்தூள் 1 ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்.
  4. கிழங்கு வெந்ததும் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய்த்தூள் கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
  5. உருளைக்கிழங்கில் மசாலா ஏறும் வரை கிளறி விடவும்.
  6. சாதம் சேர்த்து கிளறவும்.
  7. மிளகு சீரகத்தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
  8. சுவையான உருளைக்கிழங்கு சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்