வீடு / சமையல் குறிப்பு / வறுத்தரைத்த தேங்காய் மோர் குழம்பு

Photo of Varutharaitha coconut morkuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
447
1
0.0(0)
0

வறுத்தரைத்த தேங்காய் மோர் குழம்பு

Sep-03-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வறுத்தரைத்த தேங்காய் மோர் குழம்பு செய்முறை பற்றி

காலை நேர அவசரத்திற்கு விரைவாக செய்யும் குழம்பு வகை இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் துருவல் அரை கப்
  2. தயிர் ஒரு கப்
  3. உப்பு ஒரு தேக்கரண்டி
  4. வெண்டைக்காய் 4 முதல் 6
  5. தக்காளி சிறியது 1
  6. வறுத்து அரைக்க தேவையானவை
  7. கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு கொத்தமல்லி விதை தலா 2 தேக்கரண்டி
  8. மிளகாய் வற்றல் 6 முதல் 8
  9. வெந்தயம் அரை தேக்கரண்டி
  10. எண்ணெய்-2 டிராப்ஸ்
  11. தாளிக்க தேவையானவை
  12. தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  13. கடுகு உளுத்தம் பருப்பு தலா ஒரு தேக்கரண்டி
  14. மிளகாய் வத்தல் ஒன்று
  15. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. கடாயில் வறுக்க கொடுத்தவற்றை வறுத்து கொள்ளவும்
  2. சிறிது ஆறவைத்து தேங்காயுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  3. தயிரை 1/4 கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கடைந்து கொள்ளவும்
  4. அரைத்த விழுதை தயிரில் கலந்து கொள்ளவும்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து வெண்டைக்காய் தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. தயிர் கலவையை சேர்த்து ஒரு கொதி விடவும்
  7. உப்பு சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்