வீடு / சமையல் குறிப்பு / பால் கொழுக்கட்டை

Photo of PAAL KOZHUKKATTAI by Radha Balu at BetterButter
402
1
0.0(0)
0

பால் கொழுக்கட்டை

Sep-06-2018
Radha Balu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பால் கொழுக்கட்டை செய்முறை பற்றி

இனிப்பு வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு--1 கப் (அரிசியை ஊறவைத்து, வடிகட்டி மிக்சியில் நைசாக அரைக்கவும்.) அல்லது ரெடி கொழுக்கட்டை மாவு கடையில் வாங்கலாம்.
  2. பால்---1 கப்
  3. வெல்லம் --1 கப்
  4. தேங்காய்ப்பால்---1/2 கப்
  5. ஏலக்காய் ---6
  6. நெய்---4 தேக்கரண்டி
  7. குங்குமப்பூ---சில இதழ்கள்
  8. உப்பு---1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. 1.உருட்டிய அரிசி மாவு உருண்டைகளின் அளவுக்கு, தண்ணீரை கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் செய்து வைத்துள்ள உருண்டைகளில் பாதி அளவைப் போடவும்.
  2. 2.அடுப்பை சின்னதாக வைத்து, மெதுவாகக் கிளறவும். மீண்டும் தண்ணீர் கொதித்ததும், மீதமுள்ள உருண்டைகளைப் போடவும்.
  3. 3.அடுப்பை பெரிதாக்கினாலும், அடிக்கடி கிளறினாலும் உருண்டைகள் கரைந்து விடும். 15 நிமிடங்கள் வெந்ததும், பால் சேர்க்கவும். சற்று கொதித்ததும் வெல்லத்தையும், தேங்காய்ப் பாலையும் சேர்க்கவும்.
  4. 4.பத்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி ஏலப்பொடி, குங்குமப்பூ சேர்க்கவும். சுவையான பால் கொழுக்கட்டை அருமையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்