வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பொடி சாதம்

Photo of Raw banana Podi Rice by Menaga Sathia at BetterButter
381
1
0.0(0)
0

வாழைக்காய் பொடி சாதம்

Sep-09-2018
Menaga Sathia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் பொடி சாதம் செய்முறை பற்றி

இந்த ரெசிபி செப் வெங்கடேஷ் பட் சமையல் ஷோவில் பார்த்து செய்தது.மிக எளிதாக செய்யகூடியது..

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வடித்த சாதம் -2 கப்
  2. வாழைக்காய் -1
  3. காய்ந்தமிளகாய் -2
  4. காஷ்மீர் மிளகாய் -3
  5. மிளகு -1 டீஸ்பூன்
  6. தனியா -3/4 டீஸ்பூன்
  7. கடலைபருப்பு -1 டீஸ்பூன்
  8. உளுத்தம் பருப்பு-1/2 டீஸ்பூன்
  9. தேங்காய்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
  10. வறுத்த வேர்கடலை -2டேபிள்ஸ்பூன்
  11. கடுகு-1/2 டீஸ்பூன்
  12. உளுத்தம் பருப்பு-1/2 டீஸ்பூன்
  13. கறிவேப்பிலை-1 ஈர்க்கு
  14. பெருங்காயபொடி-1/4 டீஸ்பூன்
  15. உப்பு -சுவைக்கு
  16. நல்லெண்ணய்-2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைக்காயை நீரில் வேகவைத்து,தோலுரித்த பின் மசித்து வைக்கவும்.
  2. கடாயில் 1டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்தமிளகாய், காஷ்மீரி மிளகாய், தனியா,உளுத்தம் பருப்பு,கடலைப்பருப்பு, மிளகு,அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து,ஆறியபின் கொரகொரப்பாக பொடிக்கவும்.
  3. பின் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து தேங்காய்துறுவல், வறுத்த வேர்கடலை, பொடித்த பொடி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
  4. உப்பு,சாதம் சேர்த்து கிளறி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்