வீடு / சமையல் குறிப்பு / வாழை இலை வடை

Photo of Banana leaf vadai by Renuka Devi at BetterButter
525
0
0.0(0)
0

வாழை இலை வடை

Sep-11-2018
Renuka Devi
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழை இலை வடை செய்முறை பற்றி

கட்லட் வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சிம்மெரிங்
  • கிரில்லிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலைப்பருப்பு ஒரு கப்
  2. சோம்பு அரை டீஸ்பூன்
  3. சீரகம் அரை ஸ்பூன்
  4. வரமிளகாய்-2
  5. வெங்காயம் ஒன்று
  6. பூண்டு 2 பல்
  7. கொத்தமல்லி கருவேப்பிலை சிறிதளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. வாழை இலை சமைப்பதற்கு

வழிமுறைகள்

  1. பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. மிக்ஸியில் சீரகம் சோம்பு பூண்டு மிளகாய் போட்டு ஒரு சுற்றி எடுக்கவும்
  3. அதிலேயே ஊற வைத்த பருப்பையும் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  4. உப்பு ,பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும்
  5. வாழை இலையை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  6. பருப்புக் கலவையை வாழை இலையில் வைத்து மடிக்கவும்
  7. தவாவில் மடித்த வாழையிலைகளை வரிசையாக அடுக்கவும்
  8. அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் வேக விடவும்
  9. மீண்டும் திருப்பி போட்டு இன்னொரு ஐந்து நிமிடம் மறுபக்கம் வேக விடவும்
  10. பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் எடுக்கும்
  11. வெந்ததும் சூடாக இருக்கும் போதே இலையிலிருந்து எடுத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்