வீடு / சமையல் குறிப்பு / எம்டி ஹோட்டல் சால்னா

Photo of Empty Hotel Saalnaa by Fathima Sujitha at BetterButter
214
0
0.0(0)
0

எம்டி ஹோட்டல் சால்னா

Sep-17-2018
Fathima Sujitha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

எம்டி ஹோட்டல் சால்னா செய்முறை பற்றி

ஹோட்டல் சால்னாவை இனி உங்க வீட்டிலே ருசிக்கலாம் ...

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பெரிய வெங்காயம் - 2
  2. தக்காளி - 2
  3. இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
  4. மிளகாய் - 2
  5. ஏலக்காய் -2
  6. பட்டை - சிறிய துண்டு
  7. கிராம்பு - 3
  8. சோம்பு - 1/2 டீஸ்பூன்
  9. கறிவேப்பில்லை - சிறிதளவு
  10. கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு
  11. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  12. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  13. கர மசாலா - 1/2 டீஸ்பூன்
  14. கொத்தமல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
  15. சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
  16. தேங்காய் - 1 கப்
  17. முந்திரி பருப்பு - 10
  18. எண்ணெய் - தாளிக்க
  19. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் தேங்காய் மற்றும் முந்திரியை நன்கு மையாக அரைத்து வைத்து கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சுடானதும் பட்டை, கிராம்பு ஏலக்காய் போடவும்.
  3. நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் .( வெங்காயம் சீக்கிரமாக வதங்குவதற்காக உப்பு சேர்க்கிறோம்) .
  4. பின் வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
  5. பொடியாக நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பில்லை சேர்க்கவும்.
  6. இரண்டாக கீறிய மிளகாயை சேர்த்து வதக்கவும்.
  7. மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
  8. பின் குறிப்பிட்டுள்ள மற்ற அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து வதக்கவும்.
  9. மசாலா தூள்களை சேர்க்கும் போது அடுப்பை மீடியம் தீயில் வைக்கவும். (அடிபிக்காமல் இருப்பதற்காக..)
  10. பின் இரண்டிலிருந்து 2 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
  11. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  12. 2 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
  13. பின் நைஸாக அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் முந்திரி விழுதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் அல்லது மிதமான தீயில் வைக்கவும்.
  14. ஒரு மூடி போட்டு பாதியளவு பாத்திரத்தை மூடி எண்ணெய் பிரிந்து வரும் வரை 10 நிமிடம் வைக்கவும்.
  15. அவ்வளோ தான் , சுவையான எம்டி ஹோட்டல் சால்னா தயார்...
  16. பரோட்டாவுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்