வீடு / சமையல் குறிப்பு / ஈசி தக்காளி தோசை

Photo of EASY TOMATO DOSA by Abirami Navaneethakrishnan at BetterButter
507
2
3.5(0)
0

ஈசி தக்காளி தோசை

Sep-18-2018
Abirami Navaneethakrishnan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈசி தக்காளி தோசை செய்முறை பற்றி

ஈஸியான இரவு உணவு எளிதில் சமைத்து விடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • சௌத்இந்தியன்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அரிசி அரை கப்
  2. தக்காளி நான்கு
  3. வெங்காயம் 1 நறுக்கியது
  4. தேங்காய்த் துண்டுகள் நறுக்கியது அரை கப்
  5. சோம்பு ஒரு டீஸ்பூன்
  6. சீரகம் ஒரு டீஸ்பூன்
  7. பூண்டு 6 பல்
  8. வர மிளகாய் 5 நம்பர்
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. கருவேப்பிலை சிறிதளவு
  11. கொத்தமல்லி சிறிதளவு
  12. கடல் எண்ணெய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஊறவைத்த அரிசியை ஒரு மிக்ஸர் கிரைண்டரில் சேர்க்கவும்
  3. அரிசியை கொரகொரப்பாக தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்
  4. வெட்டி வைத்த நான்கு தக்காளியை அதில் சேர்க்கவும்
  5. அதனுடன் சீரகம் ஒரு டீஸ்பூன் சேர்க்கவும்
  6. அதனுடன் சோம்பு ஒரு டீஸ்பூன் சேர்க்கவும்
  7. அதனுடன் 7 பல் பூண்டு சேர்க்கவும்
  8. அதனுடன் வர மிளகாயை பொடியாக கிள்ளி சேர்க்கவும்
  9. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்
  10. தேவையான அளவு உப்பு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்
  11. பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இதனுடன் சேர்க்கவும்
  12. பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்க்கவும்
  13. கறிவேப்பிலை கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்க்கவும்
  14. நன்றாக கலக்கி இதை தோசையாக வார்க்கலாம்
  15. அருமையான சுவை மிகுந்த தக்காளி தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்