வீடு / சமையல் குறிப்பு / வெங்காய ரவா தோசை

Photo of Onion Rava Dosa by Vaishnavi Prakash at BetterButter
540
1
0.0(0)
0

வெங்காய ரவா தோசை

Sep-19-2018
Vaishnavi Prakash
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

வெங்காய ரவா தோசை செய்முறை பற்றி

ரவை அரிசி மாவு சேர்த்து உடனடியாக செய்யக்கூடிய தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. ரவை ஒரு கப்
  2. அரிசி மாவு ஒரு கப்
  3. மைதா அல்லது கோதுமை அரை கப்
  4. தயிர் அரை கப்
  5. வெங்காயம் பொடியாக நறுக்கியது அரை கப்
  6. பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது 2
  7. கேரட் துருவியது அரை கப்
  8. தேங்காய் பொடியாக நறுக்கியது கால் கப்
  9. கொத்தமல்லி கருவேப்பிலை இஞ்சி பொடியாக நறுக்கியது சிறிதளவு
  10. மிளகு மற்றும் சீரகம் தலா அரை தேக்கரண்டி
  11. உப்பு தேவையான அளவு
  12. என்னை தோசை சுட்டு எடுக்க

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ரவை அரிசி மாவு மைதா உப்பு சேர்த்து கிளறவும்
  2. மாவில் பொடியாக நறுக்கி வைத்துள்ள அனைத்து பொருட்கள் மற்றும் தயிர் சேர்த்து கிளறவும்
  3. 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கி 10 நிமிடம் வைக்கவும்
  4. இப்பொழுது ரவை தண்ணீரை உறிந்து கெட்டியாக இருக்கும்
  5. கெட்டியாக இருக்கும் மாவில் ஒன்றரை முதல் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கரைக்கவும்
  6. தவாவில் எளிதாக பரவலாக ஊற்றும் அளவிற்கு தண்ணீர் சேர்த்தால் போதுமானது
  7. தவாவில் எண்ணெய் ஊற்றி மாவை பரப்பி இரண்டு புறம் வெந்தவுடன் எடுக்கவும்
  8. டிபன் சாம்பார் மற்றும் சட்னியுடன் பரிமாறவும்
  9. டிபன் சாம்பார் செய்முறை தனியாக பதிவு செய்கிறேன்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்