வீடு / சமையல் குறிப்பு / மட்டன் கீமா முர்தபா

Photo of Mutton kheema murtabak by Rabia Hamnah at BetterButter
568
1
0.0(0)
0

மட்டன் கீமா முர்தபா

Sep-20-2018
Rabia Hamnah
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் கீமா முர்தபா செய்முறை பற்றி

விருந்தினர்கள் வரும்பொழுது இப்படி முர்தபா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் எப்பொழுதும் சப்பாத்தி பரோட்டா என்று செய்யாமல் இப்படி மாறுபட்ட செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • முகலாய்
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு -1கப்
  2. மைதா -1/4 கப்
  3. வெங்காயம் -2 பொடியாக நறுக்கியது
  4. கேரட்- 2 துருவியது
  5. உருளைக்கிழங்கு- 2 பொடியாக துருவியது
  6. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  7. மட்டன் கொத்து கறி 150 கிராம்
  8. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  9. சீரகத் தூள் 2 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  11. கொத்தமல்லித்தழை ஒரு கொத்து
  12. முட்டை இரண்டு
  13. நெய் கால் கப்
  14. எண்ணெய் தாளிக்க
  15. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தை சூடாக்கி 2 டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்
  2. என்னை நன்றாக காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  3. உப்பு சேர்த்து வதக்கினால் வெங்காயம் சீக்கிரமாக வெந்து விடும்
  4. வெங்காயம் பாதியளவு வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  5. இஞ்சி பூண்டின் பச்சை வாசனை அடங்கியதும் கொத்துக்கறியை சேர்த்து வதக்க வேண்டும்
  6. கூறிய அனைத்து தூள் வகைகளையும் சேர்த்து வதக்க வேண்டும்
  7. கொத்துக்கறி பாதியளவு வெந்த உடன் துருவி வைத்த கேரட் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்
  8. தேவைக்கு உப்பு மற்றும் மிளகாய்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
  9. காய்கறிகள் கொத்துக்கறியுடன் நன்றாக சேர்ந்து வதங்கிய பின் இறக்கி வைத்து ஆற வைக்க வேண்டும், stuffing ரெடி.
  10. முட்டையுடன் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்து வைக்க வேண்டும்
  11. கோதுமை மாவு மைதா மாவு உப்பு சிறிது நெய் மற்றும் வெந்நீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்
  12. சப்பாத்தி மாவு 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்
  13. பின்பு சப்பாத்தி மாவில் சம அளவு உருண்டை பிடித்து வைக்கவும்
  14. உருண்டை பிடித்தமாவை சப்பாத்தியை வார்ப்பது போல் வார்த்து அனைத்து மாவையும் இப்படி வார்த்து வைக்கவும்
  15. பின்பு தோசை தவாவை சூடுபடுத்தவும்
  16. சப்பாத்தியை போல் வார்த்த மாவை ஒன்றன்பின் ஒன்றாக லேசாக வாட்டி எடுக்கும் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்தால் போதுமானது
  17. இரண்டு பக்கமும் லேசாக வாட்டி எடுத்தால் போதுமானது
  18. இப்படி அனைத்து சப்பாத்தியை லேசாக வாட்டி எடுக்க வேண்டும்
  19. இப்பொழுது வாட்டிய சப்பாத்தியின் மேல் அடித்து வைத்த முட்டையை ஒரு ஸ்பூன் ஊற்றி சப்பாத்தியின் மேல் முழுவதும் பரவும்படி நன்றாக தேய்க்க வேண்டும்
  20. சப்பாத்தியின் நடுவில் இரண்டு ஸ்பூன் ஸ்டாப்பிங்கை வைத்து நான்கு ஓரங்களை மடித்து Egg washயை வைத்து ஒட்டி வைக்கவும்
  21. பின்பு தோசை தவாவை சூடுபடுத்தவும்
  22. இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து ஒவ்வொரு முர்த்தபாவையும் அதில் போட்டு குறைந்த தணலில் வேக விட்டு முறுவியதும் இறக்கவும்.
  23. இப்படி அணைத்து முர்த்தபாவையும் தயார் செய்யவும்
  24. பின்பு முக்கோணமாக வெட்டி வைக்கவும்
  25. முஸ்தபா தயார் மயோனைஸ் மற்றும் சாஸுடன் பரிமாற சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்