வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி மற்றும் தக்காளி பாசிப் பருப்பு டால்

Photo of Chappathi and Tomatto Dhall by Deepa Srivatsan at BetterButter
823
1
0.0(0)
0

சப்பாத்தி மற்றும் தக்காளி பாசிப் பருப்பு டால்

Sep-20-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி மற்றும் தக்காளி பாசிப் பருப்பு டால் செய்முறை பற்றி

பாசிப்பருப்பு உடம்பிற்கு நல்லது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெங்களூர் தக்காளி கால் கிலோ
  2. பாசிப்பருப்பு மூன்று கரண்டி
  3. பச்சை மிளகாய் 3
  4. தேங்காய் துருவல் கால் கப்
  5. சீரகம் ஒரு ஸ்பூன்
  6. பெருங்காயம் கால் டீஸ்பூன்
  7. கடுகு அரை டீஸ்பூன்
  8. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிதளவு
  10. மிளகாய்வற்றல் 1
  11. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  12. கொத்தமல்லி சிறிதளவு

வழிமுறைகள்

  1. பாசிப் பருப்பை நன்றாக குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும்
  2. தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  3. தேங்காய் மற்றும் 2 பச்சை மிளகாய் சீரகம் ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு , கறிவேப்பிலை , மிளகாய் வற்றல் மற்றும் ஒரு பச்சை மிளகாயைக் கீறி போட்டு நறுக்கிய தக்காளியைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும் மஞ்சள்தூள் பெருங்காயம் சேர்க்கவும்
  5. தக்காளி நன்கு வெந்ததும் வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் அரைத்த விழுது சேர்த்து உப்பு மற்றும் கொத்தமல்லி இலை தூவி நன்றாக ஒரு கொதி வந்ததும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்