வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி, கொண்டைகடலை சன்னா மசாலா

Photo of Chapathi, channa masala by Rabia Hamnah at BetterButter
1150
1
0.0(0)
0

சப்பாத்தி, கொண்டைகடலை சன்னா மசாலா

Sep-23-2018
Rabia Hamnah
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி, கொண்டைகடலை சன்னா மசாலா செய்முறை பற்றி

சுவையான பிரபலமான காம்பினேஷன்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • மேற்கு வங்காளம்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு – 1 கப்
  2. உப்பு – தேவைக்கு
  3. நெய் – ½ ஸ்பூன்
  4. பால் – 1 டேபில் ஸ்பூன்
  5. சன்னா மசாலா தேவையானவை:
  6. வெள்ளை கொண்டைகடலை – 1 கப்
  7. வெங்காயம் -1
  8. தக்காளி – 3
  9. இஞ்சி பூண்டு மசாலா – 1 தேக்கரண்டி
  10. மிளகாய்தூள் – 1 தேக்கரண்டி
  11. மஞ்சள்த்தூள் – 1/2 தேக்கரண்டி
  12. சன்னா மசாலா பவுடர் – 2 மே.கரண்டி
  13. பச்சை மிளகாய் – 2
  14. அம்ச்சூர் பவுடர் – 1/ தேக்கரண்டி
  15. உப்பு –தேவைக்கு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவில் உப்பு, நெய் விட்டு கலந்து பிறகு பால், கொஞ்ச கொஞ்சமாக சுடு தண்ணீர் சேர்த்து மாவினை நன்றாக் பிசைய வேண்டும்.
  2. ஒரு ஈரப்பதமுள்ள துணியில் மாவை சுற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. மாவினை ஒரே அளவாக சின்ன துண்டுகளாக வெட்டி உருண்டை பிடிக்க வேண்டும்.
  4. சப்பாத்தி பலகையில் கோதுமை மாவை சப்பாத்தி மாவின் மேல் தூவி மாவை தேய்த்து எடுக்கவும்.
  5. இப்படி எல்லா மாவையும் தேய்த்து வைக்கவும்.
  6. தவாவில் தேய்த்து வைத்த சப்பாத்தி மாவை போட்டு இறு புறமும் வேக விடவும்.
  7. தேவைப்பட்டால் எண்ணெய் சேர்த்து வேகவிடவும்.
  8. சன்னா மசாலா செய்முறை:
  9. கொண்டைகடலையை இரவே நன்றாக அலசி தேவைக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் கொண்டைக்கடலையில் ஒரு டீத்தூள் பாக்கெட், உப்பு தேவைக்கு தண்ணீர் ஊற்றி 5-6 விசில் வேக வைக்கவும்.
  10. விசில் அடங்கிய பிறகு சன்னா தனியாக தண்ணீர் தனியாக எடுத்து வைக்கவும். டீதூள் சாயம் நன்றாக இறங்கி கருப்பு கடலையாக இருக்கும்.
  11. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு பிரிஜ்சி இலை போட்டவும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நன்றாக வேகவிடவும்.
  12. பிறகு சன்னா மசாலா , மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு கலந்து பச்சை வாசனை போகும் வரை சிம்மில் வைக்கவும். நன்றாக எண்ணெய் விட்டு இருக்கும் பொழுது எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றவும். இதனுடன் வேக வைத்த கடலையினை சேர்த்து கொதிக்க வைக்கவும். தேவைக்கு காரம், உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
  13. நன்றாக சன்னா தேவைக்கு கெட்டியான பின்பு கடைசியாக அம்ச்சூர் பவுடர் றைசேர்க்கவும். அடுப்பினை அணைத்துவிடவும். பரிமாறும் பொழுது சிறுது பொடியாக நறுக்கிய வெங்காயம் , கொத்தமல்லி தூவி பரிமாரவும். சப்பாத்தி, ரொட்டியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்