வீடு / சமையல் குறிப்பு / பீட்டா பிரட் மற்றும் ஃபலாஃபல் பால்ஸ் ஹம்மூசுடன்

Photo of Pita bread and falafel balls with hummus by Sumaiya Arafath at BetterButter
389
2
0.0(0)
0

பீட்டா பிரட் மற்றும் ஃபலாஃபல் பால்ஸ் ஹம்மூசுடன்

Sep-24-2018
Sumaiya Arafath
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீட்டா பிரட் மற்றும் ஃபலாஃபல் பால்ஸ் ஹம்மூசுடன் செய்முறை பற்றி

கொண்டைகடலையால் செய்யப்பட்ட ஃபலாஃபல் மற்றும் ஹம்மூஸ் மிகவும் சத்தானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மிடில் ஈஸ்டர்ன்
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பீட்டா பிரட் செய்ய தே.பொருட்கள்;
  2. கோதுமை+மைதா 2 கப்
  3. உப்பு
  4. சர்க்கரை 1 தே.க
  5. எண்ணை 4 தே.க
  6. ஈஸ்ட் 1 தே.க
  7. பேக்கிங் தூள் ஒரு சிட்டிகை
  8. ஃபலாஃபல் செய்ய தே.பொருட்கள;
  9. கொண்டைகடலை 250 கிராம்
  10. நறுக்கிய வெங்காயம் அரை கப்
  11. பூண்டு 3 பல்
  12. உப்பு
  13. சீரகத்தூள் அரை தேக்கரண்டி
  14. பார்ஸ்லி இலை
  15. மல்லித் தூள் அரை தேக்கரண்டி
  16. வணக்கம் மிளகாய்த் தூள் கால் தேக்கரண்டி
  17. நல்ல மிளகு தூள் கால் தேக்கரண்டி
  18. எண்ணெய் பொரிக்க
  19. ஹம்மூஸ் செய்ய தேவையான பொருட்கள்
  20. ஊற வைத்து அவித்த கொண்டைக்கடலை -1 கப்
  21. வெள்ளை எள் அரை கப்
  22. பூண்டு 5 பல்
  23. எண்ணை 1/2 கப்
  24. தண்ணீர் தேவைக்கு
  25. உப்பு தேவைக்கு
  26. எலுமிச்சை சாறு

வழிமுறைகள்

  1. பீட்டா பிரட் செய்முறை;
  2. ஈஸ்ட் மற்றும் சர்க்கரையை சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும்
  3. மைதா மாவு ,உப்பு ,பேக்கிங் தூள் ,ஈஸ்ட் கலவை, தயிர்,எண்ணை சேர்த்து சிறு சுடு தண்ணீரில் நன்றாக பிசைந்து வைக்கவும்
  4. மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்
  5. மாவு உப்பி வந்ததும் சிறு உருண்டைகளாக உருட்டி சிறிது நேரம் வைத்து பிறகு தோசை கல்லில் போட்டு சுட்டெடுக்கவும்
  6. பீட்டா பிரட் தயார்...
  7. ஃபலாஃபல் செய்முறை:
  8. கொண்டைக்கடலை இரவு முழுதும் ஊற வைக்கவும்
  9. பிறகு குக்கரில் வைத்து நன்றாக வேக வைக்கவும்
  10. கொண்டைக்கடலையுடன் எல்லா சாதனங்களும் சேர்த்து மிக்சியில் இட்டு தரதரவென்று அரைத்துக் கொள்ளவும்
  11. சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  12. எண்ணையில் பொரித்துக்கொள்ளவும்
  13. ஹம்மூஸ் செய்முறை:
  14. ஹம்மூஸ் செய்ய தேவையான எல்லா பொருட்களையும் மிக்சியில் இட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  15. உப்பு மற்றும் புளிப்பு சரிபார்த்துக் கொள்ளவும்
  16. ஒலிவ் எண்ணெயை ஊற்றி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்