Photo of Usili by Menaga Sathia at BetterButter
325
0
0.0(0)
0

உசிலி

Sep-24-2018
Menaga Sathia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உசிலி செய்முறை பற்றி

இது வெண்பொங்கல் போலவே இருக்கும் ஆனால் உதிரியாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி -1 கப்
  2. பாசிப்பருப்பு -1/4 கப்
  3. நீர் -2 1/2 கப்
  4. உப்பு - தேவைக்கு
  5. தாளிக்க:
  6. எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
  7. நெய் -1 டேபிள்ஸ்பூன்
  8. கடுகு -1/2டீஸ்பூன்
  9. உளுத்தம்பருப்பு -1/2 டீஸ்பூன்
  10. காய்ந்தமிளகாய் -3
  11. கடலைபருப்பு -1 டேபிள்ஸ்பூன்
  12. கறிவேப்பிலை -1 ஈர்க்கு
  13. பெருங்காயபொடி -1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசி+பாசிப்பருப்பு இவற்றை தனிதனியாக வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து கழுவி நீரை வடிக்கவும்.
  2. குக்கரில் எண்ணெய்+நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
  3. பின் கழுவிய அரிசி,பருப்பு,உப்பு,நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவைக்கவும்.
  4. ப்ரெஷர் அடங்கியதும் முள்கரண்டியால் கிளறிவிடவும்.
  5. சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்