Photo of Chaiva Eeral by Fathima Sujitha at BetterButter
340
1
0.0(0)
0

சைவ ஈரல்

Sep-25-2018
Fathima Sujitha
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சைவ ஈரல் செய்முறை பற்றி

ஆரோக்கியமான ஓர் உணவு ... எளிதில் செய்ய கூடியது ...ருசியானது..."இதை அப்படியே சாப்பிடலாம் என்பதை போல" சைவ ஈரலை டின்னராகவும் சாப்பிடலாம் ...உறவினர்கள் வீட்டுக்கு வந்தால் டின்னர் பார்ட்டிகளில் வித்தியாசமாக இதையும் சைடிஷ்ஷாகவும் பரிமாறலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சை பயிறு - 200
  2. இஞ்சி - 1 சிறிய துண்டு
  3. பூடு - 4 பல்
  4. தேங்காய் - 1 மூடி
  5. முந்திரி - 6
  6. சீரகம் - 1 டீஸ்பூன்
  7. சோம்பு - 1 டீஸ்பூன்
  8. வெங்காயம் - 1
  9. தக்காளி - 1
  10. பட்டை - 1
  11. கிராம்பு - 2
  12. ஏலக்காய் - 2
  13. கறிவேப்பில்லை - தேவையான அளவு
  14. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  15. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  16. மல்லி தூள் - 1 டீஸ்பூன்
  17. உப்பு - தேவையான அளவு
  18. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் பச்சை பயிறை 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊற வைத்துள்ள பச்சை பயிறை இட்லி மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  3. மாவுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி பாத்திரத்தில் இட்லியாக ஊற்றவும்.
  4. இட்லிகளை ஈரல் தூண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.
  5. அடுத்து மசலாவிற்கு, துருவிய தேங்காய் , இஞ்சி, பூடு, முந்திரி, சீரகம், சோம்பை தண்ணீர் ஊற்றி நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு சேர்க்கவும்.
  7. கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  8. பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
  9. வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  10. தக்காளி சேர்த்து வதக்கவும்.
  11. பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மசாலாவிற் தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  12. வதங்கியதும், தேங்காய் மசாலாவை சேர்த்து வதக்கவும்.
  13. சிறிதளவு தண்ணீர் ஊற்றி மசாலா பச்சை வாடை போகும் வரை கிளறவும்.
  14. இறுதியாக இட்லியை சேர்த்து மசாலா இட்லியுடன் சேரும் அளவு கிளறி இறக்கவும்.
  15. ஆரோக்கியமான சைவ ஈரல் தயார் ..!!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்