வீடு / சமையல் குறிப்பு / முட்டை உப்புமா

Photo of Egg upma by Rabia Hamnah at BetterButter
968
1
0.0(0)
0

முட்டை உப்புமா

Sep-25-2018
Rabia Hamnah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை உப்புமா செய்முறை பற்றி

சிம்பிளான சுவையான உப்புமா. உப்புமா பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை - 1 கப்
  2. முட்டை-2
  3. வெங்காயம் - 1 1/2(பெரியது)
  4. கடுகு-1ஸ்பூன்
  5. துருவிய தேங்காய் -1டேபிள்ஸ்பூன்
  6. உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
  8. மிளகாய் - 2
  9. மல்லி, கறிவேப்பிலை - 1கொத்து
  10. எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
  11. நெய் - 2டீஸ்பூன்
  12. மிளகுத்தூள்-1/2ஸ்புன்
  13. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

  1. ரவையை நெய் சேர்த்து மணம் வருமாறு வறுத்துக்கொள்ளவும்.
  2. வெங்காயம், மல்லிஇலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையை உப்பு மிளகு சேர்த்து பீட் செய்யவும்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை, மிளகாய், துருவிய தேங்காய் உப்பு போட்டு வதக்கி 1 1/2- இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
  4. ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் அடித்து வைத்த முட்டையை ஊற்றி வேக வைக்கவும் நன்றாக முட்டையை கொத்தி (scramble) விடவும்.
  5. கொதிவந்தவுடன் மல்லி இலை, வறுத்த ரவையை போட்டு கட்டிப்பிடிக்காமல் சிம்மில் வைத்து கிளறவும்.
  6. பின்பு ஸ்க்ரம்பில் முட்டையை ரவையுடன் சேர்த்து கிளறி விடவும்
  7. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்