வீடு / சமையல் குறிப்பு / WITH MOGUL BIRIYANI NIGHT DINNER FOR SPECIAL DAY !

Photo of WITH MOGUL BIRIYANI NIGHT DINNER FOR SPECIAL DAY ! by Ramani Thiagarajan at BetterButter
0
4
5(2)
0

WITH MOGUL BIRIYANI NIGHT DINNER FOR SPECIAL DAY !

Sep-25-2018
Ramani Thiagarajan
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • నాన్ వెజ్
 • మీడియం/మధ్యస్థ
 • రాత్రి విందు
 • తమిళనాడు
 • తక్కువ నూనెలో వేయించటం
 • ప్రెజర్ కుక్
 • ఆవిరికి
 • వేయించేవి
 • ప్రధాన వంటకం
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. சீரக சம்பா அரிசி 300 கிராம்
 2. மட்டன் 500 கிராம்
 3. மட்டன் கொத்தியது 200 கிராம்
 4. நெய் 200 கிராம்
 5. எண்ணெய் 200கிராம்
 6. பாதாம்,முந்திரி,பிஸ்தா,பீகான்,உலர் திராட்சை,கிரேன் பெரி போன்ற உலர் பழங்களும்,உலர் கொட்டைகளும் 100கிராம்
 7. கரம் மசாலா தூள் 1தேக்கரண்டி
 8. பட்டைத் தூள் 1 மேஜை கரண்டி
 9. லவங்க தூள். 1மேஜை கரண்டி
 10. சோம்பு தூள் 1 மேஜை கரண்டி
 11. மஞ்சள் தூள் 1 மேஜை கரண்டி
 12. ஏலக்காய் தூள் 1 மேஜை கரண்டி
 13. கொத்துமல்லி விதை, காய்ந்த மிளகாய் வறுத்து அரைத்த விழுது தலா 3 மேஜை கரண்டி
 14. இஞ்சி பூண்டு விழுது, பூண்டு பச்சை மிளகாய் விழுது தலா 3 மேஜை கரண்டி
 15. கடல் பாசி சிறிதளவு
 16. பட்டை 3 துண்டுகள்
 17. லவங்கம் 6
 18. பிரியாணி இலை 4
 19. சிறிய வெங்காயம் 15
 20. தேங்காய் விழுது,தேங்காய்ப்பால் 1/2 கப்
 21. பொட்டுக்கடலைத் தூள் 3 மேஜைக்கரண்டி
 22. முட்டை வெள்ளைக் கரு
 23. புதினா 1 கட்டு
 24. கொத்துமல்லி இலை 1 கட்டு
 25. தயிர் 2 கப்
 26. ரசத்திற்கு புளி
 27. ரசப்பொடி 1 மேஜைக் கரண்டி
 28. காய்ந்த மிளகாய்
 29. தக்காளி விழுது 1/2 கப்
 30. பூரி மாவு
 31. வெள்ளை சாதம்
 32. இட்லி மாவு
 33. குங்குமப்பூ 2 சிட்டிகை
 34. ரசத்திற்கு பருப்பு வேகவைத்த தண்ணீர்
 35. தாளிக்க எண்ணெய்
 36. கடுகு 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

 1. முகல் பிரியாணி செய்வதற்கு உலர் பருப்பு வகைகள்,கசகசா ஆகியவற்றை தூள் செய்துக்கொள்ளவும்.
 2. உலர் கொட்டைகள்,உலர்பழங்களை நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
 3. வெங்காயத்தை நெய்,எண்ணெய் கலவையில் நன்கு வதக்கி அரைத்து அதனுடன் கொத்து மல்லி விதை அரைத்தது,இஞ்சி பூண்டு விழுது, பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு வைக்கவும்.
 4. அதனுடன் ஆட்டிறைச்சியை சேர்த்து வதக்கி அரை வேக்காடு வேகவைக்கவும்.
 5. குக்கரில் நெய், எண்ணெய் சேர்த்து முழு மசாலாக்கள், மசாலா தூள்கள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 6. அதனுடன் அரிசி சேர்த்து வதக்கி நறுக்கிய பொதினா,கொத்துமல்லி இலை பாதி வெந்த கறி சேர்க்கவும்.
 7. வறுத்து வைத்துள்ள உலர் கொட்டைகள், உலர் பழங்களை சேர்க்கவும்.
 8. பாலில் ஊற வைத்த குங்குமப்பூ,நெய்,தயிர்,எலுமிச்சை சாறு,1 1/2 மடங்கு தேங்காய்ப்பாலுடன் கலந்த தண்ணீர் சேர்க்கவும்.
 9. தேவையான அளவு உப்பு சேர்த்து விசில் வரும் போது சிம்மில் 5நிமிடம் வைத்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
 10. சுவையான முகல் பிரியாணி தயார்.
 11. கொத்துக்கறி உருண்டைக்கு வெங்காயத்துடன் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.
 12. அதனுடன் கறி,தேங்காய்ப்பூ,உலர் கொட்டைத்தூள்,பொட்டுக் கடலைத் தூள்,முட்டை வெள்ளை,பொடியாக வெட்டிய கொத்துமல்லி தளை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.
 13. உருண்டைகளை எண்ணெயில் வறுக்கவும்.
 14. பிறகு கிரேவியில் வேகவிட்டு எடுக்கவும்.
 15. வெந்த உருண்டைகளை எடுத்து வைக்கவும்.
 16. மட்டன் தேங்காய்ப்பால் குழம்பிற்கு வெங்காயத்தை சிறிது எண்ணெயில் நன்கு வதக்கவும்.
 17. வாங்கிய வெங்காயத்தை ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
 18. அதனுடன் மசாலா சாமான்களைச் சேர்த்து வதக்கவும்.
 19. அதனுடன் கறியை சேர்த்து வதக்கவும்.
 20. தேங்காய் விழுது சேர்த்து வேகவைத்து தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
 21. மிளகு குழம்பிற்கு அதே போல் வதக்கவும்.
 22. அதனுடன் மிளகு பூண்டு அரைத்ததை சேர்த்து சுண்டியவுடன் இறக்கவும்.
 23. ரசம் செய்வதற்கு பருப்பை சிறிது மஞ்சள்,எண்ணெய் விட்டு வேக வைத்து தண்ணீரை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 24. ரசப்பொடி,பூண்டு மிளகு சீரகம் ஒன்றிரண்டாக இடித்தது, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி கறிவேப்பிலை,பெருங்காயத்தூள் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 25. ஒரு பாத்திரத்தில் கடுகு தாளித்து மேலே குறிப்பிட்ட பொருள்களைச் சேர்த்து வதக்கி கரைத்த புளி,தக்காளி விழுது,காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
 26. உப்பு தண்ணீர் (பருப்பு வேகவைத்த தண்ணீர்) சேர்த்து நுரைத்து வரும்போது இறக்கவும்.
 27. இரவு நேரத்தில் ஜீரணத்திற்கு ஏற்ற சுவை மிக்க ரசம் தயார்.
 28. முளைக்கட்டிய வெந்தயம்,ஊறவைத்த அவல் சேர்த்து இட்லி மாவு முதல் நாளே தயாரித்து வைத்துக்கொள்ளவும்.
 29. தயார் செய்த மாவு.
 30. இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக விடவும்.
 31. இட்லி தயார்.
 32. கோதுமை மாவில் சிறிது நெய்,உப்பு,வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து பிசைந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.பிறகு பூரிகளாக திரட்டிக்கொள்ளவும்.
 33. பூரிகளை சுட்டு எடுக்கவும்.
 34. பூரிகள் தயார்.
 35. தயாரித்த வெள்ளை சாதம்,உரை ஊற்றிய தயிர்,முகல் பிரியாணி,கொத்துக்கறி உருண்டைகள்,பூரிகள்,ரசம்,தேங்காய்ப்பால் மட்டன் குழம்பு,மட்டன் மிளகு ஶாஶ்,இட்லி ஆகியவைகளுடன் இரவு டின்னருக்கு பரிமாறவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pinky Srini
Sep-25-2018
Pinky Srini   Sep-25-2018

Nicely explained:)

Ramani Thiagarajan
Sep-25-2018
Ramani Thiagarajan   Sep-25-2018

இது மிகவும் ஆரோக்கியமான உணவு ஆகும்.இதன் சுவை எல்லா வயதினரையும் விரும்பி உண்ண தூண்டும்.சீரகம்,மிளகு, பூண்டு போன்ற பொருட்கள் சேர்வதால் ஜீரணத்திர்க்கு ஏற்ற உணவாகும்.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்