வீடு / சமையல் குறிப்பு / கொங்கு ஸ்பெஷல் பச்சை பயிறு பருப்பு

Photo of green gram dal by Vinothini Manoharan at BetterButter
267
2
0.0(0)
0

கொங்கு ஸ்பெஷல் பச்சை பயிறு பருப்பு

Sep-27-2018
Vinothini Manoharan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொங்கு ஸ்பெஷல் பச்சை பயிறு பருப்பு செய்முறை பற்றி

கொங்கு ஸ்பெஷல் பச்சைப்பயிறு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சைப்பயறு ஒரு கப்
  2. ஆயில் தேவையான அளவு
  3. கடுகு சிறிதளவு
  4. பூண்டு 4 பல்
  5. வர மிளகாய் ஐந்து
  6. கருவேப்பிலை கொத்தமல்லித் தழை சிறிதளவு
  7. சின்ன வெங்காயம் 15
  8. தக்காளி ஒன்று
  9. நல்லெண்ணெய் ஒரு டீஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  12. சீரகம் ஒரு டீஸ்பூன்
  13. மிளகும் கொத்துமல்லியும் சேர்த்து ஒரு டீஸ்பூன்
  14. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பருப்பை போட்டு நன்றாக வறுக்க வேண்டும்
  2. பிறகு அந்த பருப்பை குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி,சிறிது மங்கள் தூள் ,வரமிளகாய் 2, நல்லெண்ணெய், தக்காளி, 2 சீரகம் சேர்த்து எட்டு விசில் விட வேண்டும்
  3. பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும் வெள்ளை பூண்டு கறிவேப்பிலை வர மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்
  4. பிறகு சீரகமும் நறுக்கி வைத்த சின்ன வெங்காயம் வேக வைத்த பருப்பையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்
  5. அதில் இரண்டு மிளகு 2 கொத்தமல்லி சிறிது சேர்க்க வேண்டும்
  6. பிறகு சிறிது மஞ்சள் தூள் மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்
  7. பிறகு மத்தி வைத்து நன்றாக கடைய வேண்டும்
  8. சூடாக கொத்தமல்லியை தூவி பரிமாறலாம் சுவையான கொங்கு பச்சை பயிர் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்