வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி ஸ்பெஷல் வெஜிடபிள் சொதி, அவியல் மற்றும், நாட்டு சக்கரை பொங்கல்

Photo of Sothi, aviyal nattu sarkarai aviyal by Shoba Jaivin at BetterButter
654
2
0.0(0)
0

திருநெல்வேலி ஸ்பெஷல் வெஜிடபிள் சொதி, அவியல் மற்றும், நாட்டு சக்கரை பொங்கல்

Sep-29-2018
Shoba Jaivin
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

திருநெல்வேலி ஸ்பெஷல் வெஜிடபிள் சொதி, அவியல் மற்றும், நாட்டு சக்கரை பொங்கல் செய்முறை பற்றி

திருநெல்வேலி மாவட்டத்தில் புதுமண தம்பதியர்களுக்கு ஒரு சமூகத்தினர் விருந்து வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த வெஜிடபிள் சொதி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெஜிடபிள் சொதி செய்ய தேவையான பொருட்கள்
  2. கேரட் ஒன்று முருங்கைக்காய் ஒன்று
  3. பீன்ஸ் உருளைக்கிழங்கு 2
  4. முதல் தேங்காய்ப் பால் ஒரு கப்
  5. இரண்டாம் தேங்காய்ப்பால் 2 கப்
  6. பச்சை மிளகாய் 4
  7. இஞ்சி ஒரு துண்டு பூண்டு 4 பல்
  8. பட்டை கிராம்பு ஏலக்காய் தாளிக்க
  9. அவியல் செய்ய தேவையான பொருள்கள்
  10. விருப்பமான காய்கறிகள்
  11. சின்ன வெங்காயம் 20
  12. தேங்காய் அரை மூடி துருவியது
  13. சீரகம் ஒரு ஸ்பூன் பச்சை மிளகாய் ஆறு
  14. தேங்காய் எண்ணெய் உப்பு தேவையான அளவு
  15. தயிர் 2 ஸ்பூன்
  16. நாட்டு சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்
  17. பச்சரிசி ஒரு டம்ளர்
  18. பாசி பருப்பு முக்கால் டம்ளர்
  19. நெய் தேவையான அளவு
  20. நாட்டு சர்க்கரை தேவையான அளவு
  21. முந்திரி திராட்சை வறுக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெஜிடபிள் சொதி செய்முறை
  2. குக்கரில் தேங்காய் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு கறிவேப்பிலை சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. இஞ்சி பூண்டு உப்பு சேர்த்து வதக்கவும்
  4. விருப்பமான காய்கறிகள் இரண்டாம் தேங்காய்ப் பால் விட்டு குக்கரில் 3 விசில் விடவும்
  5. காய்கறிகள் நன்கு வெந்ததும் முதல் தேங்காய்ப்பால் விட்டு இறக்கவும்
  6. அவியல் செய்முறை
  7. ஒரு பாத்திரத்தில் விருப்பமான காய்கறிகளை தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும்
  8. தேங்காய் சின்ன வெங்காயம் சீரகம் பச்சைமிளகாயை கரகரப்பாக அரைக்கவும்
  9. பாதி வெந்த காய்கறிகள் உடன் மசாலா தேங்காய் மசாலாவை சேர்க்கவும்
  10. காய்கறிகள் நன்கு வெந்தவுடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மேலே விட்டு பரிமாறவும் அல்லது தயிர் சேர்த்து பரிமாறவும்
  11. நாட்டு சர்க்கரை பொங்கல் செய்முறை
  12. நாட்டு சர்க்கரை தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டிக் கொள்ளவும்
  13. குக்கரில் பச்சரிசி மற்றும் பாசிப்பயறு சேர்த்து நன்கு குழைய வேக விட வேண்டும்
  14. அரிசி பருப்பு நன்கு வெந்ததும் சர்க்கரை கரைசலை ஊற்றி வேக விடவும்
  15. நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்