வீடு / சமையல் குறிப்பு / மெட்ராஸ் சிக்கன் பிரியாணி

Photo of Madras chicken biriyani by Gomathi Dinesh at BetterButter
1028
2
0.0(0)
0

மெட்ராஸ் சிக்கன் பிரியாணி

Oct-01-2018
Gomathi Dinesh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மெட்ராஸ் சிக்கன் பிரியாணி செய்முறை பற்றி

Chennai special

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் 900 கிராம்
  2. பாஸ்மதி அரிசி 600கிராம்
  3. எண்ணெய் 1கப்
  4. பட்டை 3
  5. இலவங்கம் 6
  6. ஏலக்காய் 6
  7. ஜாவித்திர 2
  8. வெங்காயம் 2
  9. இஞ்சி பூண்டு விழுது 50கிராம்
  10. பச்சை மிளகாய் 5
  11. தக்காளி 2
  12. தயிர் 1கப்
  13. புதினா 2கை
  14. கொத்தமல்லி 2கை
  15. மஞ்சள் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  16. மிளகாய்த்தூள் 2 மேஜைக்கரண்டி
  17. எலுமிச்சை சாறு 1 பழத்தின்
  18. நெய் 2 மேஜைக்கரண்டி
  19. உப்பு தேவைக்கேற்ப
  20. பிரியாணி கலர் அல்லது குங்குமப்பூ 1பின்சி

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை 1/2மணி நேரம் ஊற வைக்கவும்
  2. சிக்கனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு, தயிர் சேர்த்து 1மணி நேரம் ஊற வைக்கவும்
  3. ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீரில் பட்டை கிராம்பு ஏலக்காய் 1கை புதினா 2தேக்கரண்டி நெய், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  4. தண்ணீர் கொதித்தவுடன் பாஸ்மதி அரிசியை சேர்க்கவும்
  5. அரிசி 50% வெந்தவுடன் வடித்து தனியே ஆற வைக்க வேண்டும்
  6. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் ஜாவித்திரி சேர்த்து வதக்கவும்.
  7. இதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  8. இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  9. இஞ்சி பூண்டு வதங்கியதும் சிக்கனை சேர்த்து 4 -5 நிமிடங்கள் கிளறவும்
  10. பின்னர் இதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  11. தக்காளி வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள், உப்பு, தயிர், பச்சை மிளகாயை சேர்த்து கிளறவும்
  12. இந்தக் கலவை கெட்டியாகும் வரை கிளறவும்
  13. இப்பொழுது வடித்து வைத்த பாசுமதி அரிசியை உள்ளவராக சிக்கன் மீது போடவும்
  14. இதன் மீது சிறிது நெய் சேர்த்து தம் போடவும்
  15. ஸ்டவ்வில் தோசை கல் வைத்து அதன் மேல் பிரியாணி செய்யும் பாத்திரம் வைத்து 30 நிமிடங்கள் தம்மில் வைக்கவும்.
  16. 30 நிமிடங்கள் கழித்து சுவையான சென்னை சிக்கன் பிரியாணி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்