வீடு / சமையல் குறிப்பு / நெல்லை ஏர்வாடி எண்ணெய் கத்தரிக்காய்

Photo of Nellai Eruvadi Yennai Kadharikay by Fathima Sujitha at BetterButter
367
0
0.0(0)
0

நெல்லை ஏர்வாடி எண்ணெய் கத்தரிக்காய்

Oct-03-2018
Fathima Sujitha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நெல்லை ஏர்வாடி எண்ணெய் கத்தரிக்காய் செய்முறை பற்றி

எங்க ஊரில் இந்த உணவு விரும்பி செய்வோம்...விஷேஷ வீடுகளில் செய்வதுண்டு...!!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கத்தரிக்காய் - 1/4 கிலோ
  2. தக்காளி - 150
  3. வெங்காயம் - 100
  4. மிளகாய் - 3
  5. கறிவேப்பில்லை கொத்தமல்லி - சிறிதளவு
  6. வேர்கடலை - 50 கிராம்
  7. எள் -50 கிராம்
  8. புளி - எலுமிச்சை அளவு
  9. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  10. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  11. நல்லெண்ணெய் - 150
  12. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி, கத்தரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. மிளகாய் கறிவேப்பில்லை கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
  4. மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. குக்கரை மூடி வேக வைத்து எடுக்கவும்.
  6. தோல் நீக்கிய வேர்கடலை மற்றும் எள்ளை பொடியாக்கி வைத்து கொள்ளவும்.
  7. வேக வைத்துள் கத்தரிக்காயை மசித்து அதனுடன் வேர்கடலை எள் பொடியை சேர்த்து கிழறவும்.
  8. தேவையான அளவு புளி கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை ஆஃப் செய்யவும்.
  9. சுவையான எண்ணெய் கத்தரிக்காய் தயார் ...!!!
  10. நெய் சோறு,தேங்காய் சோறு, பிரியாணி உடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்